அழகு குறிப்புகள் : வேண்டாம்! இந்தப் பொருட்களை மட்டும் முகத்தில் பூசிவிடவேக் கூடாது! அவை என்னவென்று பாருங்கள்!
உங்கள் முகத்தின் அழகை பாதிக்கும் இந்தப் பொருட்களை மட்டும் உங்கள் முகத்தில் பூசிவிடவேக் கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இணையத்தில் பார்க்கும் சரும பராமரிப்பு குறிப்புக்களை அப்படியே பின்பற்றி உங்கள் சருமத்துக்கு கேடு விளைவித்துவிடாதீர்கள். உங்கள் சருமத்தை வெண்மையாக்கும் என குறிப்பிடப்படும் சில குறிப்புகள் உங்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். சில பொருட்கள், உங்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கலாம். ஆனால், இதை நீங்கள் நீண்ட காலம் பயன்படுத்த முடியாது. மேலும் சிலவற்றை நீங்கள் முகத்தில் பூசவேக் கூடாது. அது என்னவென்று பாருங்கள்.
பாடி லோசன்
பாடி லோசனை நீங்கள் முகத்தில் பூசக்கூடாது. இவற்றை ஏன் நாம் பாடி அதாவது உடலில் மட்டுமே பூச வேண்டிய லோசன்கள் எனக் குறிப்பிடுகிறோம் என்றால், அதற்கு காரணம் அவை முகத்தில் உள்ள சருமத்துக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்காது. உடலில் உள்ள சருமத்துக்கு உகந்தவையாக இருக்கும். இவை கொஞ்சம் திக்கானதாகவும், அடர்த்தியானதாகவும், எண்ணெய் கொண்டதாகவும், முகத்தில் உள்ள துவாரங்களை அடைத்துவிடுவதாகவும் இருக்கும். இதனால் உங்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும் அல்லது அலர்ஜி உண்டாகும். ஏனெனில் இதில் செயற்கை மணமூட்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
சர்க்கரை
சர்க்கரையை நீங்கள் முகத்திற்கு ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம் என எண்ணற்ற வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. தக்காளியில் சர்க்கரையை வைத்து முகத்திற்கு ஸ்கிரப் செய்தால் உடனடி முகப்பொலிவு கிடைக்கும் என்று கூறப்படும். ஆனால் அது உண்மை கிடையாது. சர்க்கரை உங்கள் முகத்தில் உள்ள சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எரிச்சல், சிவத்தல், வறட்சி மற்றும் எண்ணற்ற உபாதைகளை ஏற்படுத்தும்.