மகா விஷ்ணுவின் ராம அவதாரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய பெயர்கள்; ஆண் குழந்தைகளுக்கு ஏற்றது!
ராம அவதாரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர் பட்டியல் இதோ.
உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை நீங்கள் சூட்ட விரும்பினால், ராம அவதாரத்தில் இருந்து அழகிய பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்காக ராம அவதாரத்தில் ராமருக்கு வைக்கப்பட்ட எண்ணற்ற பெயர்களில் இருந்து சில பெயர்களை உங்களுக்காக இங்கு தொகுத்துள்ளோம். பெற்றோர் ராம அவதாரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ராமா என்றால் தைரியம், அன்பு, நன்னடத்தை, சரியான அணுகுமுறை ஆகிய அர்த்தங்களைக் குறிக்கிறது. தெய்வீகமும், அறமும் இணைந்து உங்களுக்கு அர்த்தமுள்ள பெயர்களைக் கொடுக்கும். ராமர் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு வைத்தால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும். மேலும் உங்கள் குழந்தைகளுக்கு எண்ணற்ற நற்குணங்கள் வரும்.
தீரோதத்தா குணட்டாமா
இந்தப்பெயர் எண்ணற்ற அறநெறிகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எந்தச் சலனமும் இல்லாத தைரியமிக்கவர் என்பதைக் குறிக்கிறது. இந்தப் பெயருக்கு அமைதியான, சிறப்பான, பொறுமையான, சரியான விஷயங்களைச் செய்யக்கூடிய மற்றும் வலுவான நபர் என்ற எண்ணற்ற அர்த்தங்கள் வரும். இது அனைத்து சவாலான சூழல்களிலும் தீர்க்கமுடன் எதிர்த்து நிற்பவர் என்ற அர்த்தத்தை தரும்.
தாஷாகிரீவா ஷிரோஹரா
பத்துத்தலை ராவணணை வதம் செய்தவர் என்ற அர்த்தம் கொண்டது இந்தப்பெயர். தீமைகளை எதிர்த்து வெல்லும் நன்மை என்ற பொருளையும் தருகிறது. இது ஹீரோவின் பலம் கொண்டது என்ற பொருளைத் தருகிறது. தெய்வீக சக்தி கொண்ட நபர் என்ற பெயரைக் குறிக்கிறது. இது எதிரிகளை பந்தாடும் நபர் என்ற அர்தத்தையும் கொடுக்கிறது.
கோசலேயா
கோசலையின் மகன் என்ற அர்த்தத்தை இந்தப்பெயர் தருகிறது. இந்தப்பெயருக்கும் கொண்டாடப்படும் அரச குடும்பத்தின் வாரிசு என்று பொருள். இந்த பெயர், கருணை, ஆசிர்வாதம், தாயின் அன்பு ஆகிய அர்த்தங்களைக் குறிக்கிறது. இந்தப்பெயருக்கு குடும்பத்தில் கடமையாற்றுபவர், அற நெறிகளின் வழி நடப்பவர். அடுத்தவருக்கு நன்மைகளை மட்டுமே செய்பவர் போன்ற எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கக்கூடிய பெயர்.
மஹோதரா
மஹேதரா என்றால் தொப்பையைக் கொண்டவர் என்று பொருள். ஆனால் இந்த அர்த்தம் உங்களுக்கு காமெடியாகத் தெரிந்தாலும். இது குறிப்பது அதிகப்படியான, நேர்மையான மற்றும் உலக வாழ்வில் அனைவருக்கும் தனது பெருங்கருணையைத் தருபவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். இந்த பெயர் செல்வம், தாங்கும் திறன், பொறுமை மற்றும் ஆக்கும் திறன் கொண்ட நபர் என்ற அர்ததத்தைக் கொடுக்கும் பெயராகும்.
புண்ணியோதயா
புண்ணியம் என்பது மங்களகரமான பெயர். இது அறநெறியில் நடப்பவர் என்று பொருள். இந்தப்பெயருக்கு வாழ்வின் ஆசிர்வாதங்களைக் கொண்டு வருபவர் என்று பொருள். இந்தப் பெயர் உங்கள் வாழ்வில் நேர்மறை எண்ணங்களைக் கொண்ட நபர் என்பதை சுட்டிக்காட்டும். இந்தப் பெயருக்கு சரியான வழியில் நடப்பவர் என்ற அர்த்தம் உள்ளது. இந்தப்பெயருக்கு நன்னெறிகளில் சிறந்தவர் என்ற அர்த்தம் உள்ளது.
பூர்வபாஷன்
முதலில் பேசும் நபர், தேவையற்ற விஷயங்களை அல்ல, ஒரு செயலின் எதிர்வினையை முன்னரே கணிக்கக்கூடிய நபர் என்ற அர்தத்தைக் கொடுக்கும். இந்த பெயருக்கு ஞானம் என்று பொருள். முன்னெடுப்பு என்ற பொருளும் உள்ளது. இந்தப்பெயர் தெளிவான சிந்தனை என்பதைக் குறிக்கிறது. இவர்கள் அனைவருடனும் நன்முறையில் பேசி மகிழ்ந்திருப்பவர்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இந்தப்பெயருக்கு எதிர்காலத்தில் வரும் அனைத்து விஷயங்களையும் முன்னரே கணித்து கூறுபவர் என்ற அர்த்தம் உள்ளது.
ரகுபுங்கவா
ரகுபுங்கவா என்றால் ரகு குல வம்சத்தின் சிறப்பான நபர் என்ற பொருளைத் தரும். ரகு குலம் என்பது ராமரின் குலமாகும். இது அரச பாரம்பரியம் கொண்ட நபர் என்பதைக் குறிக்கும். இது கவுரவமான நபர் என்பதைக் குறிக்கிறது. இந்தப்பெயர் ரகு வம்சத்தின் வாரிசு என்ற அர்த்தத்தைத் தருகிறது. இது தலைமைப்பண்பு, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் கடமை ஆகியவற்றை குறிக்கும் பெயராகும்.
ராமபத்ரா
ராமா என்பது அழகிய பெயராகும். இந்தப்பெயர் இரக்கம், சரியானவற்றறை செய்யும் நபர் மற்றும் பாதுகாப்பு ஆகிய அர்த்தங்களைத் தரும். இந்தப்பெயர், பலம் மற்றும் அன்பு ஆகியவற்றின் சமமான நிலை என்பதைக் குறிக்கும். இந்தப்பெயர் ராமனை அமைதியின் அங்கமாகவும், பாதுகாப்பாளராகவும் குறிப்பிடுகிறது.
சத்யவாச்சே
உண்மையை மட்டுமே பேசும் நபர் என்று பொருள். இது நேர்மை, இரக்கம், நாணயம் மற்றும் அறநெறிகளைக் குறிப்பிடும் பெயராகும். இந்தப்பெயர், செயல்கள் மற்றும் வார்த்தைகளில் நாணயம் உள்ள நபர் என்பதைக் குறிக்கிறது. இந்தப்பெயர் தர்மம் மற்றும் அறநெறியில் வாழ்பவர் என்பதை குறிக்கும் பெயராகும்.
ஷ்யமங்கா
ஷ்யாமங்கா என்றால் பொன்னிற மேனியை உடையவர் என்று பொருள். இது அமைதியான மற்றும் தெய்வீக குணம் கொண்ட நபர் என்ற அர்தத்தைத் தருகிறது. இந்தப்பெயர் ராமனின் பெயராகும். இந்தப் பெயர் அழகு, பணிவு மற்றும் ஆன்மீக குணம் கொண்ட நபர் என்பதைக் குறிக்கும். இந்தப் பெயருக்கு அறநெறியாளர் மற்றும் நற்பண்புகள் கொண்ட நபர் என்ற அர்த்தமும் உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்