Mango Cheese Cake: தித்திக்கும் சுவையுடன் கூடிய மாம்பழத்தில் சுவை மிக்க பஞ்சு போன்ற சீஸ் கேக்! செய்து ருசிக்கலாம் வாங்க
தித்திக்கும் சுவை கொண்ட மாம்பழத்தை வைத்து இனிப்பு சுவை மிக்க பஞ்சு போன்ற மோங்கோ மில்லட் சீஸ் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

அதிகம் பேரால் விரும்பி சாப்பிடக்கூடிய பழவகையாக மாம்பழம் இருந்து வருகிறது. மாம்பழத்தை பழங்களை ராஜா என்று அழைக்கிறார்கள். இதற்கு அதன் தித்திப்பான சுவை மட்டுமல்லாமல், மாம்பழத்தின் இடம்பிடித்திருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏ,பி,சி,ஈ, கே, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்களும் காரணமாக இருக்கின்றன.
கோடை காலம் மாம்பழத்தின் சீசனாக இருப்பதால் பல்வேறு ரகங்களை கொண்ட மாம்பழம் சந்தையில் கிடைக்கின்றன. இதனால் மாம்பழத்தை உணவு டயட்டில் பல்வேறு வகைகளில் சேர்த்து அதன் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
மாம்பழத்தை பச்சையாக அப்படிய சாப்பிடுவது முதல் ஸ்மூத்திகளாக தயார் செய்வது, ஜூஸ் ஆக பருகுவது என பல்வேறு வகைகளில் எடுத்துக்கொள்ளலாம். சுவை மிகுந்த மாம்பழத்தை வைத்து சீஸ் கேக் ரெசிபி தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்