பரவசமூட்டும் சுவையைத் தரும் பாசுந்தி; தின்னத்தின்ன தெவிட்டாத இன்பம் தரும் இனிப்பு!
பாசுந்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
ஃபுல் கிரீம் பால் – 2 லிட்டர்
குங்குமப்பூ – சிறிதளவு
சர்க்கரை – அரை கப்
அலங்கரிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
பாதாம் – ஒரு டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன்
(இவையனைத்தையும் துருவி எடுத்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
கடாயில் பாலை ஊற்றி குறைவான தீயில் அடுப்பை வைத்து பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவேண்டும். இதை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும்.
இதை பால் கால் லிட்டர் அளவு சுண்டும் வரை, பாலை கலந்து கலந்து கொதிக்கவிட்டு, அந்த ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவேண்டும்.
பாலாடை ஏடுகளுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து அதை நன்றாக கிளறவேண்டும். பாலை நீங்கள் மேலும், மேலும் காய்ச்சி அந்த பாலாடையின் ஏடுகளையும் இதில் சேர்க்கலாம்.
அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் நெய்யில் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தாக்களை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்து சர்க்கரையுடன் கரைந்த பாலாடை கலவையின் மீது தூவி பரிமாறிமாறினால், ஆஹா என்ன சுவை என்று அனைவரும் வியந்து சாப்பிடுவார்கள்.
இது இனிப்பு என்பதால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும், மீண்டும் வேண்டும் என்றும் கேட்கும் அளவுக்கு சுவை நிறைந்ததாக இருக்கும்.
குளிர்காலத்தில் பாசந்தியை சூடாகவும், வெயில் காலத்தில் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறவேண்டும்.
இங்கு இன்னொரு ரெசிபியையும் தெரிந்துகொள்ளுங்கள். கருப்பு உளுந்து பால் செய்வது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
சுக்குப் பொடி – கால் ஸ்பூன்
கருப்பட்டி – கால் கப்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
செய்முறை
கருப்பு உளுந்தை நன்றாக அலசி அரை மணி நேரம் மட்டும் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு அல்லது உளுந்து வேகும் வரை விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து ஆறியவுடன், அதை மட்டும் மிக்ஸிஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து மற்றும் உளுந்து வேகவைத்த தண்ணீர் சேர்த்து கூடுதலாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
அதில் தேங்காய்ப்பால், கருப்பட்டியை பாகக்கி சேர்த்து அனைத்தும் சேர்ந்து கொதித்தவுடன், சுக்கு, ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவேண்டும்.
கருப்பட்டிக்கு பாகு பதம் தேவையில்லை. நன்றாக தண்ணீரில் கரைந்து வந்தாலே போதும். இந்த கருப்பட்டி சேர்த்த கருப்பு உளுந்து பால் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு அது கருப்பை ஆரோக்கியம், மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்வது என உதவுகிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்