Barnyard Millet : தினம் ஒரு தானியம் அறிவோம்! நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும் குதிரைவாலியின் பயன்கள் என்ன?
Barnyard Millet : தினம் ஒரு தானியம் அறிவோம்! நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும் குதிரைவாயின் பயன்கள் என்ன?
100 கிராம் குதிரைவாலியில் 341 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 65.5 கிராம், புரதச்சத்து 6.2 கிராம், நார்ச்சத்து 10 கிராம், இரும்புச்சத்து 2.9 கிராம், கால்சிய சத்து 0.02 கிராம் நிறைந்துள்ளது.
குதிரைவாலியின் அறிவியல் பெயர் ஈச்சினோசோலா ஃப்ரூமான்டாசியா என்பதாகும். உமி நிறைந்த ஒரு சிறுதானிய வகை. இதில் இருந்த உமி செரிமானம் தருவதில்லை. எனவே அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிடவேண்டும். தோலை நீக்கினால் அதை உட்கொள்ள முடியும்.
குதிரைவாலியில் உள்ள நன்மைகள் என்ன?
சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவு
நீரிழிவு நோயாளிகள் அவர்களின் வழக்கமான அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை குறைக்கவேண்டும். அவற்றை எடுத்துக்கொள்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கடுமையாக பாதிக்கிறது. இவற்றிற்கு மாற்று உணவு தானியங்களும் கிடையாது. எனவே சிறுதானிய உணவுகள் அதை பூர்த்தி செய்யும்.
அதில் குதிரைவாலி முதலிடத்தில் உள்ளது. இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே கோதுமை மற்றும் உணவு தானியங்களுக்கு இது எளிதான மாற்று ஆகும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கொழுப்பை குறைக்க உதவும். இதில் உள்ள மாவுச்சத்துக்களும் உடலுக்கு நல்லது.
உடலின் நோய் எதிர்ப்பை பலப்படுத்துகிறது
துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அது குதிரைவாலியில் அதிகம் உள்ளது. உங்கள் உடலை பலமாக்கி, தொற்றுகளில் இருந்து காக்கிறது.
பாலிஃபீனால்கள், ஃபைட்டோகெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. கழிவுகளை நீக்குகிறது. இது ரத்தசோகைக்கு எதிராக செயல்படுகிறது. இதில் இரும்பு, கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
கொழுப்பு அளவை குறைக்கிறது
குதிரைவாலி சாப்பிடுவது கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் கார்போஹட்ரேட்கள் மற்றும் கொழுப்புச்சத்தும் உள்ளது. எனவே இதை உட்கொள்ளும்போது இதயம் ஆரோக்கியமாகிறது. குதிரைவாலியை வழக்கமாக எடுத்துக்கொண்டால், 8 சதவீதம் உடலில் உள்ள கொழுப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரும்புச்சத்து நிறைந்தது. இது மற்ற சிறுதானியங்களில் இருந்து வேறுபடுகிறது. இதில் செரிமானமாகக்கூடிய புரதச்சத்து அதிகம் உள்ளது. கலோரிகளும் குறைவாக இருக்கும்.
இது உடலுக்கு தேவையான ஆற்றலை மட்டும் கொடுக்கும். சாப்பிட்டால் மிகவும் லைட்டாக இருக்கும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும்.
எடை மேலாண்மைக்கு உதவும்
குளூட்டன் இல்லாத சிறுதானியம் இந்த குதிரைவாலி அரிசி. எனவே குளூட்டன் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு உகந்தது. மற்ற சிறுதானியங்களைப்போலவே இதுவும் உடல் எடை குறைக்க உதவுகிறது. பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
இடையில் ஏற்படும் பசிஉணர்வை கட்டுப்படுத்துகிறது. நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இடையில் நொருக்கு தீனிகள் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை குறைக்க உதவுகிறது.
டாபிக்ஸ்