Tamil News  /  Lifestyle  /  Barley Benefits Reduces The Risk Of Gallbladder Surgery Barley Prevents Intestinal Cancer We Know One Grain A Day

Barley Benefits: பித்தப்பை அறுவைசிகிச்சை ஆபத்தை குறைக்கும்! குடல் புற்றுநோயை தடுக்கும் பார்லி! தினம் ஒரு தானியம் அறிவோம்

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 08:34 AM IST

Barley Benefits: பித்தப்பை அறுவைசிகிச்சை ஆபத்தை குறைக்கும்! குடல் புற்றுநோயை தடுக்கும் பார்லி! தினம் ஒரு தானியம் அறிவோம்

Barley Benefits: பித்தப்பை அறுவைசிகிச்சை ஆபத்தை குறைக்கும்! குடல் புற்றுநோயை தடுக்கும் பார்லி! தினம் ஒரு தானியம் அறிவோம்
Barley Benefits: பித்தப்பை அறுவைசிகிச்சை ஆபத்தை குறைக்கும்! குடல் புற்றுநோயை தடுக்கும் பார்லி! தினம் ஒரு தானியம் அறிவோம்

ட்ரெண்டிங் செய்திகள்

பார்லி அமெரிக்க உணவுகளில் அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உடலில் கொழுப்பை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பேணுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை செய்யக்கூடிய பார்லி.

இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்

பல நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள்

இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. மாவாக, தோலுடன், தோலின், ஃப்ளேக்ஸாக என அவை வேறுபடுகிறது. பார்லியை முழு தானியமாக எடுத்துக்கொண்டால், இதில் நார்ச்சத்த, மாலிபிடெனம், மாங்கனீஸ் மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் காப்பர், வைட்டமின் பி1, குரோமியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இதில் உள்ள லிக்னன்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, புற்றுநோய் ஆபத்து மற்றும் இதய நோயை தடுப்பவை. மற்ற தானியங்களில் உள்ளதுபோல் பார்லியில் உள்ள ஆன்டி-நியூட்ரியன்ட்கள் உங்கள் உடலில் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை பாதிக்கிறது. 

எனவே பார்லியை ஊறவைத்து, முளைக்க வைத்து எடுத்துக்கொள்வது ஆன்டிநியூட்ரியன்ட்களை குறைக்க உதவுகிறது. இவ்வாறு செய்வது பார்லியின் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.

பசியை குறைத்து உடல் எடை குறைக்க உதவுகிறது

வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து பசியை போக்குகிறது. அது உடல் எடை குறைக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளதால் பசியை குறைக்கிறது. குறிப்பாக பீட்டாகுளுகேன் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இதற்கு உதவுகிறது. 

பீட்டா குளுகேன் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், செரிமானத்தை தாமதமாக்கி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. இது பசியை குறைத்து வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. இது வயிற்றில் உள்ள தொப்பையை குறைத்து, வளர்சிதை மாற்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்தது

குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் அதிகம் கரையாத நார்ச்சத்துக்கள்தான அதிகம் உள்ளது. அது கரைவதை போல் தண்ணீரில் கரையாது. இது குடல் இயக்கத்தை அதிகரித்து, அதிக மலத்தை வெளியேற்றி, உங்கள் மலச்சிக்கலை குறைக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. 

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. அது ஃபேட்டி ஆசிட்டை உற்பத்தி செய்கிறது. இவை குடல் செல்களுககு ஊட்டமளித்து, வீக்கத்தை குறைத்து, குடல் பிரச்னைகளை காட்டிக்கொடுக்கிறது.

பித்தப்பை கற்கள் வராமல் தடுத்து பித்தப்பை அறுவைசிகிச்சை ஆபத்தை தடுக்கிறது

பார்லி, பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது. பித்தப்பையில் தொடர்ந்து கற்கள் ஏற்படும். பித்தப்பை என்பது ஒரு சிறிய உறுப்பு, கல்லீரலுக்கு கீழே உள்ளது. பித்தப்பை பித்த அமிலங்களை சுரந்து உங்கள் உடல் கொழுப்பை செரிக்க உதவுகிறது. 

பித்தப்பை கற்கள் எந்த அறிகுறிகளையும் காட்டுவது கிடையாது. பெரிய கற்கள், கடுமையான வயிறு வலியை ஏற்படுத்துகிறது. இதற்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, அறுவைசிகிச்சையை குறைக்கிறது.

கொழுப்பை குறைக்க உதவுகிறது

பார்லியில் உள்ள பீட்டா குளுக்கேன்கள் கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பித்தத்தை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பில் இருந்து கல்லீரல் தயாரிக்கும் பித்தத்தை உங்கள் உடல் மலத்தின் வழியாக வெளியேற்றுகிறது. அதிக கொழுப்பை பயன்படுத்தி கல்லீரல் நிறைய பித்தத்தை தயாரிக்க வேணடும்.

இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

இதய ஆரோக்கியத்துக்கு பார்லி தொடர்ந்து உதவுகிறது. இதை உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

மெக்னீசியமும், கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது

ரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலீன் சுரப்பை அதிகரித்து டைப் 2 டயபடீஸ் ஏற்படாமல் தடுக்கிறது. இதற்கு பார்லியின் உயர் மெக்னீசிய சத்து உதவுகிறது. இன்சுலீன் சுரப்பதற்கு முக்கியமானதும், உடலின் சர்க்கரையை பயன்படுத்தும் அளவை கட்டுப்படுத்துவதும் மெக்னீசியத்தின் வேலையாகும். பார்லியின் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீருடன் கரைந்து, செரிமான மண்டலத்திற்கு நகர்ந்து, ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சும் அளவை குறைக்கிறது. 

பார்லியில் செய்யப்படும் காலை உணவு, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது. இன்சுலின் சுரப்பையும், ஓட்ஸ் உள்ளிட்ட மற்ற தானியங்களை விட அதிகளவில் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குடல் புற்றுநோயை தடுக்கிறது

நாள்பட்ட நோய்களை கட்டுப்படுத்துவதில், ழுமுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை சில புற்றுநோய்களையும் தடுக்கின்றன. குறிப்பாக குடல் புற்றுநோயை குறைக்கிறது. பார்லியின் அதிக நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், உட்கொள்ளும் உணவுகள் குடலில் இருந்து வெளியேற எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைக்கிறது. 

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் குடலில் உள்ள ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை வெளியேற்றுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபைடிக் அமிலங்கள், ஃபினோலிக் அமிலங்கள் மற்றும் செப்போனின்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக உடலை பாதுகாக்கின்றன. அவை உருவாவதையும் குறைக்கிறது.

இந்த பார்லியை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முழு தானியங்களுக்கு மாற்ற எடுத்துக்கொள்ளலாம். எளிதாகவும், குறைவான விலையிலும் கிடைக்கக்கூடியது பார்லி. இதை சூப் உள்ளிட்டவற்றில் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையை கொடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்