வாழைக்காய் சாதம் : வாழைக்காய் மசாலா சாதம்; சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஒரு பருக்கை கூட மிச்சம் வராது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வாழைக்காய் சாதம் : வாழைக்காய் மசாலா சாதம்; சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஒரு பருக்கை கூட மிச்சம் வராது!

வாழைக்காய் சாதம் : வாழைக்காய் மசாலா சாதம்; சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஒரு பருக்கை கூட மிச்சம் வராது!

Priyadarshini R HT Tamil
Updated Mar 21, 2025 11:32 AM IST

வாழைக்காய் சாதம் : வாழைக்காய் மசாலா சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள். சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி, மிச்சம் வைக்காமல் காலியாகும்.

வாழைக்காய் சாதம் : வாழைக்காய் மசாலா சாதம்; சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஒரு பருக்கை கூட மிச்சம் வராது!
வாழைக்காய் சாதம் : வாழைக்காய் மசாலா சாதம்; சூப்பர் சுவையான லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஒரு பருக்கை கூட மிச்சம் வராது! (home cooking tamil )

தேவையான பொருட்கள்

• வாழைக்காய் – 3

• எலுமிச்சை பழச்சாறு – 1

• வடித்த சாதம் – ஒரு கப்

• மல்லித்தழை – கைப்பிடியளவு

• வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

• எள் – தேவையான அளவு

• உப்பு – தேவையான அளவு

• வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்

• நெய் – 2 டேபிள் ஸ்பூன்

• மல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

• கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

• துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

• மிளகு – ஒரு ஸ்பூன்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

• நெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• சோம்பு – கால் ஸ்பூன்

• வெச்தயம் – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

• இஞ்சி – கால் இன்ச் (துருவியது)

• பூண்டு – கால் இன்ச் (துருவியது)

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. வாழைக்காயை இரண்டாக வெட்டி குக்கரில் வைத்து எலுமிச்சை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவேண்டும். ஸ்டீமரில் வேக வைத்தால், இவற்றை மேலே தூவி வேகவைத்துக்கொள்ளவேண்டும். அதிகம் வெந்துவிடக் கூடாது. மிருதுவாகும் வரை வேகவைத்தால் போதும். வெளியே எடுத்து ஆறவைத்து, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

2. கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் தனியாக மல்லி விதைகளை வறுத்து எடுத்து வைத்துவிடவேண்டும். அடுத்து கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து மிளகு, வரமிளகாய் சேர்த்து வறுக்கவேண்டும். அனைத்தையும் கருகிவிடாமல் வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆறவைத்துக்கொள்ளவேண்டும். அதே கடாயில் கூடுதலாக எண்ணெய் சேர்த்து தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். இதையும் எடுத்து ஆறவைக்கவேண்டும். ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். மசாலாப்பொடி தயார். இது அதிகமாக இருந்தால் கண்ணாடி பாட்டிலில் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். மற்ற காய்கறிகள் செய்யும்போது தூவிக்கொள்ளலாம். இந்த வாழைக்காய் மசாலா சாதத்தின் முக்கிய உட்பொருளே இதுதான்.

3. கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கடுகு வெடித்தவுடன் சோம்பு சேர்க்கவேண்டும். (சோம்புக்கு பதில் நீங்கள் சீரகமும் சேர்த்துக்கொள்ளலாம்) அடுத்து பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலை இலைகளை சேர்க்கவேண்டும். அடுத்து வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும். அது பொன்னிறமானவுடன், துருவிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

4. அடுத்து வெந்த வாழைக்காயை சேர்த்து கலந்துவிட்டு, ஒரு மேஷரை வைத்து நன்றாக திரித்துவிடவேண்டும். அடுத்து உப்பு மற்றும் தயாரித்து வைத்துள்ள மசாலாப் பொடி இரண்டு ஸ்பூன் சேர்க்கவேண்டும். இதை நன்றாக கிளறி சிறிது நேரம் வேக விட்டுக்கொள்ளவேண்டும். அடுத்து, மல்லித்தழையை தூவவேண்டும். எலுமிச்சை சாற்றை அதன் மீது பிழிந்து விட்டு கிளறி இறக்கவேண்டும். வாழைக்காய் பொடிமாஸ் தயார்.

5. ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு, அது சூடானவுடன், இந்த பொடிமாஸ் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறவேண்டும். இது சூப்பர் சுவையான, மணம் கொண்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் பொடிமாஸ் சாதம் ஆகும். இது நல்ல ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். இதற்கு தொட்டுக்கொள்ள தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு ஆம்லேட் மட்டுமே போதுமானது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.