பனானா பீநட் பட்டர் பேன்கேக் : புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பனானா பீநட் பேன் கேக்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பனானா பீநட் பட்டர் பேன்கேக் : புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பனானா பீநட் பேன் கேக்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

பனானா பீநட் பட்டர் பேன்கேக் : புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பனானா பீநட் பேன் கேக்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

Priyadarshini R HT Tamil
Updated Apr 12, 2025 09:02 AM IST

பனானா பீநட் பட்டர் பேன்கேக் : இதை செய்ய உங்களுக்கு வீட்டில் உள்ள உட்பொருட்களே போதுமானது. இவை ஃபிளஃபியானதும், இனிப்பானதும் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்ததும் ஆகும். இதை நீங்கள் உங்கள் நாளை துவக்க ஏற்றதாக உணர்வீர்கள். எனவே இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

பனானா பீநட் பட்டர் பேன்கேக் : புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பனானா பீநட் பேன் கேக்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
பனானா பீநட் பட்டர் பேன்கேக் : புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பனானா பீநட் பேன் கேக்; குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

தேவையான பொருட்கள்

• பழுத்த வாழைப்பழங்கள் – 2

• கோதுமை மாவு – அரை கப்

• பால் – அரை கப்

• முட்டை – 1

• பீநட் பட்டர் – 3 டேபிள் ஸ்பூன்

• பேக்கிங் பவுடர் – அரை ஸ்பூன்

• வெண்ணிலா எசன்ஸ் – அரை ஸ்பூன் 

• பட்டைப் பொடி – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை

1. வாழைப்பழங்களை நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு பாத்திரத்தல் முட்டையை உடைத்து ஊற்றி விஸ்க் வைத்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

3. இதில் பால், வெண்ணிலா எசன்ஸ், மசித்த வாழைப்பழங்களை சேர்க்கவேண்டும்.

4. மற்றொரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பீநட் பட்டர் ஆகியவற்றை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாகக் கலந்துவிடவேண்டும். அடுத்து பேக்கிங் பவுடர் உருக்கிய பீநட் பட்டர், பட்டைப் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். பேக்கிங் பவுடர் என்பது மாவு பொங்கி வரவும், ஃபிளபியான பேன் கேக்குகள் தயாரிக்கவும் உதவும்.

5. இந்த கலவை ஏற்கனவே கலந்துவைத்துள்ள வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாகக் கலந்துவிடவேண்டும். பொறுமையாக, மெதுவாக, ஒரே திசையில் கலந்துவிடவேண்டும். இந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும். அப்போதுதான் மெத்மெத்தென்ற பேன்கேக்குகளை தயாரிக்க முடியும்.

6. இதை நன்றாக கலந்து சில நிமிடங்கள் ஊறவிடவேண்டும். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் தடவவேண்டும். இதை செய்ய வெண்ணெய் அல்லது நெய் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

7. அடுத்து தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றிவேண்டும். இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவேண்டும். அழகிய பொன்னிறமான பேன்கேக்குகள் வட்ட வடிவில் இருபுறமும் பொன்னிமாகும் வரை இருபுறமும் வேகவைத்து எடுக்கவேண்டும்.

8. இதை அடுத்து இதன் மேல் வாழைப்பழங்களை தூவி, தேனை பரப்பி பரிமாறவேண்டும். சூப்பர் சுவையான பீநட் பட்டர் பேன்கேக்குகள் தயார்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதில் கோதுமை மாவுடன் சத்து மாவு அல்லது ராகி மாவு சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் கூடுதல் சுவையானதாக இருக்கும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.