வாழைப்பழ பிரட் அல்வா; வேற வெல்ல சுவையில் வரும்; இந்த பொங்கலுக்கு செய்து அசத்துங்கள்!
வாழைப்பழ - பிரட் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள்.
இந்த சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியை விரைவாக செய்துவிட முடியும். சுவையும் அசத்தலாக இருக்கும். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானதான இருக்கும். வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே இதை நீங்கள் தினமும் சாப்பிடவேண்டியது அவசியம். வாழைப்பழ பிரட் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பிரட் – 6 துண்டுகள்
(வெள்ளை, பிரவுன் பிரட் அல்லது சிறுதானிய பிரட்களும் பயன்படுத்தலாம்)
முதலில் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
வாழைப்பழம் – 5
(நல்ல பழுத்த பழமாக இருக்கவேண்டும். இதையும் நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்)
வெண்ணெய் – 50 கிராம்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – அரை கப்
வெள்ளை சர்க்கரை – அரை கப்
பட்டைப்பொடி – ஒரு ஸ்பூன்
சுக்குப்பொடி – கால் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
(தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்)
நெய் – கால் கப்
விதைகள் அல்லது நட்ஸ்கள் – அலங்கரிக்க சிறிதளவு
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் வாழைப்பழம், வெண்ணெய், வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, பட்டைப்பொடி, சுக்குப்பொடி, வெண்ணிலா எசன்ஸ் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். அடுத்து பொடித்து வைத்துள்ள பிரட் தூளையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதை சூடாக்கி, அதில் கலந்துவைத்துள்ள அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
நன்றாகக் கிளறி நெய்விட்டு கலந்து விடவேண்டும். நட்ஸ்கள் அல்லது விதைகள் என எதை தூவினாலும் அல்வா நன்றாக இருக்கும். நட்ஸ்கள் எடுத்தால் நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளவேண்டும். விதைகள் என்றால் அப்படியே தூவிக்கொள்ளலாம்.
இதை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும், வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போதும், நீங்கள் இதை செய்து கொடுக்கும்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இன்னும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்
வேர்க்கடலை – தேங்காய்ச் சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 5 ஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 10
பூண்டு பல் – 4
புளி – சிறிதளவு
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – ஒரு கப்
உளுந்து - ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 1
பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை சேர்த்து வறுக்கவேண்டும். வேர்க்கடலை வறுபட்டவுடன் அதிலே பச்சை மிளகாய் சேர்த்து வறுத்துலிடவேண்டும். பின்னர் பூண்டு, புளி என ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவேண்டும்.
வறுத்த பொருட்களை ஆற விடவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில், பொட்டுக்கடலை, துருவிய தேங்காய், கல்லுப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவேண்டும். பாதி அரைபட்டவுடன், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வர மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால், சூப்பர் சுவையில், வேர்க்கடலை சட்னி தயார். இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்