Bald Head : வழுக்கைத் தலையிலும் முடி வளரவேண்டுமா? பரங்கி விதை எண்ணெய் போதும்! வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் தரும்
வழுக்கைத்தலையிலும் முடி வளரச்செய்யும் பரங்கிவிதை எண்ணெய். எப்படி பயன்படுத்தவேண்டும் என்று பாருங்கள்.

உங்கள் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுகிறதா? அதற்கு பரங்கிக்காய் விதை எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பாருங்கள். உங்கள் தலைமுடியை வளர்க்க பரங்கிக்காய் விதை எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த இயற்கை தீர்வாகும். இது உங்கள் தலையில் வழுக்கை விழுந்தாலும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதை எப்படி அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் பாருங்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
பரங்கிக்காய் விதை எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் முக்கிய ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும். அதற்கு வலுகொடுக்கும். இதனால் தலைமுடி உதிர்வு தடுக்கப்படும்.
நன்றாக மசாஜ் செய்யவேண்டும்
பரங்கி விதை எண்ணெயை சூடாக்கி, தலையில் வைத்து இதமாக மசாஜ் செய்யவேண்டும். நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களில் தடவக்கூடாது. இது அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தலையில் விட்டுவிடுங்கள்
தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்து, அதை அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடவேண்டும் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். அப்போதுதான் தலையில் எண்ணெய் நன்றாக ஊடுருவும். காலையில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டால், தலைமுடி நன்றாக வளரும்.
கேரியர் எண்ணெயில் கலந்துகொள்ளவேண்டும்
பரங்கிக்காய் விதை எண்ணெயை, கேரியர் எண்ணெயுடன் கலந்துகொள்ளவேண்டும். அந்த கேரியர் எண்ணெய் தேங்காய் எண்ணெய் அல்லத விளக்கெண்ணெயாக இருக்கலாம். இது உங்களுக்கு கூடுதல் நன்மைகளைக் கொடுக்கும்.
ஷாம்பூ
நன்றாக ஊறிய பின்னர், ஒரு நல்ல ஷாம்பூவை சேர்த்து தலையை அலசுங்கள். அந்த எண்ணெய் தலையில் தேங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.
வாரத்தில் 2 முதல் 3 முறை
வாரத்தில் 2 அல்லது 3 முறை தொடர்ந்து இந்த எண்ணெயைப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாளடைவில் இதன் ரிசல்ட் நன்றாகத் தெரியும்.
டிஹெச்டி (DHT)
டிஹெச்டி என்ற ஹார்மோனை பரங்கிக்காய் விதைகள் தடுத்துவிடும். இந்த ஹார்மோன்தான் முடி உதிர்தலுக்கு காரணமாகிறது. எனவே உங்கள் முடியின் அடர்த்தியை அதிகரிப்பதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.
உணவு
பரங்கிக்காய் விதை எண்ணெயை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும். இதற்குப்பின்னர் உங்கள் தலைமுடி வளர்ச்சி குறித்து நீங்கள் பெருமையாக மற்றவர்களிடம் கூறிக்கொள்வீர்கள். கட்டாயம் பின்பற்றி பலன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்