Bad Breath : வாய் துர்நாநாற்றத்தால் அவதியா? இருமுறை பல் துலக்கியும் பலனில்லை! இதுவும் காரணமாக இருக்கலாம்!
Bad Breath : வாய் துர்நாநாற்றத்தால் அவதியா? இருமுறை பல் துலக்கியும் பலனில்லை என்றால் பிரச்னை வாயில் அன்றி வேறு இடத்தில் இருக்கலாம். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Bad Breath : வாய் துர்நாநாற்றத்தால் அவதியா? இருமுறை பல் துலக்கியும் பலனில்லை என்றால் பிரச்னை வாயில் அன்றி வேறு இடத்தில் இருக்கலாம். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். வாய் துர்நாற்றத்தால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படலாம். முக்கியமாக உங்களால் சில நேரங்களில் பேச முடியாமல் கூட போகலாம். ஹாலிடோசிஸ் என்று வாய் துர்நாற்றம் மருத்துவ ரீதியாக அழைக்கப்படுகிறது.
நாம் முறையாக பற்களை பராமரிக்காவிட்டால், இது உங்களுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தும். இருமுறை தினமும் பல் துலக்குவது முக்கியம்தான், ஆனால் அதை கடந்து உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருந்தால் அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
சுவாச மண்டலத்தில் தொற்று
சைனஸ், ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாச மண்டல தொற்றுகளாலும், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த தொற்றுகள், சுவாச பாதைகளில் பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகுவதால் ஏற்படுகிறது.
இதனால் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. சுவாசக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு அதிகளவில் சல்ஃபர் உட்பொருட்கள் சுரக்கும். இந்த சல்ஃபர்தான் வாய் துர்நாற்றத்துக்கு காரணம். இதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
செரிமான மண்டலத்தில் பிரச்னைகள்
ஆசிட் ரிப்ஃளக்ஸ், வாயுத்தொல்லை மற்றும் வாயு வெளியேற்ற பிரச்னைகள், அல்சர் ஆகியவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. உங்கள் வயிற்றில் தேவையற்ற வாயுக்கள் சுரக்கும்போது, அது உங்கள் வாயில் துர்நாற்றத்தையும், கசப்பு சுவையையும் ஏற்படுத்துகின்றன. வாயுப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அதிக வாய் துர்நாற்றம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய், அதிக ரத்த சர்க்கரையால் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதில் வாய் துர்நாற்றமும் ஒன்று. சுவாசத்தில் உள்ள கீடோன்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாயில் அழுகிய பழத்தைப்போன்ற துர்நாற்றம் ஏற்படும்.
இதற்கு அசிட்டோன் சுவாசம் என்று பெயர். நீரிழிவு நோய்க்கும் வாய்துர்நாற்றத்துக்கும் உள்ள தொடர்பை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. வாய் துர்நாற்றத்தைப் போக்க நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுநீரகக் கோளாறுகள்
சிறுநீரகக் கோளாறுகள், ரத்தத்தில் இருந்து, உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அதிகரிக்க பாதை வகுத்துவிடுகிறது. இந்த நச்சுக்கள் வாயில் அமோனியா போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது யுரிமிக் சுவாசம் என்று அழைக்கப்படுகிறது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் றடந்த ஆய்வில், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் யுரிமிக் சுவாசத்துக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்துள்ளனர். சிறுநீரக பிரச்னைகளை முன்னதாகவே கண்டுபிடிப்பது, அந்த பிரச்னைகளை குணப்படுத்த உதவும்.
கல்லீரல் குறைபாடு
கல்லீரல் சிரோசிஸ் மற்றும் ஃபேட்டி லிவர் பிரச்னைகள், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு காரணம் உடலில் சேரும் நச்சுக்கள்தான். இந்த நச்சுக்களை கல்லீரல் வேதிவினைகள் மூலம் வெளியேற்றும்.
ஆனால் உங்கள் கல்லீரலே சிறப்பாக பணி செய்யவில்லையெனில் அது நடக்காது. இதனால் உங்கள் வாயில் கெட்ட நாற்றம் வீசுகிறது. கல்லீரல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசுவது அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனவே வாய் துர்நாற்றத்தால் நீங்கள் அவதிப்பட்டால், அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, அதை குணப்படுத்த முயற்சி செய்தால் மட்டும்தான் பலன் கிட்டும். அதைதவிர இருமுறை நீங்கள் பல் துலக்கினாலும், எவ்வித பலனும் இருக்காது. உங்கள் வாய் துர்நாற்றம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
டாபிக்ஸ்