Back Pain Remedy : சிசேரியனால் பெண்களைப் படுத்தும் இடுப்பு வலி; என்ன செய்யவேண்டும்? – மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
Back Pain Remedy : சிசேரியனால் பெண்களைப் படுத்தும் இடுப்பு வலிக்கு தீர்வு என்ன? சித்த மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

சிசேரியனுக்குப் பின்னர் ஏற்படும் இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்படும் பெண்கள் என்ன செய்யவேண்டும் என்று சித்த மருத்துவர் உஷா நந்தினி கூறுவதைக் கேளுங்கள். அவர் புதுயுகம் டிவிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்பட காரணங்கள்
பெண்களுக்கு இடுப்பு வலி என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் குழந்தை பிறந்த பின்னர், அதிலும் சிசேரியனுக்காக போடப்படும் ஊசிகளாலும் இது ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உடல் எடை அதிகரிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவற்றாலெல்லாம் தொடர்ந்து இடுப்பு வலி உள்ளது.
மேலும், பெண்களுக்கு இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் என்ற குடல் அழற்சி நோயும், ஹார்மோன்களின் சமமின்மையால் ஏற்படுகிறது. இந்த நோய் இருப்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று நாம் கட்டாயம் சத்தான ஆகாரங்களை உட்கொள்வதில்லை. அதனாலும், பெண்களுக்கு இடுப்பு வலிகள் உண்டாகிறது. எலும்பு தேய்மானம் உள்ளிட்ட காரணங்களும் உள்ளன. கால்சியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் குறைபாடும் இடுப்பு வலிக்கு காரணமாக இருக்கலாம்.
கருப்பையில் ஏற்படும் குறைபாடுகள், குறிப்பாக ஃபைப்ராய்ட் கட்டி அல்லது எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் ரத்தக்கட்டிகள் சார்ந்த பிரச்னைகள் என அனைத்தும் பெண்களுக்கு பிரச்னைகளை கொடுக்கக்கூடியதாக உள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரகக் கற்கள், தொற்றுகள், வெள்ளைப்படுதல், கருப்பபை இறங்கியிருத்தல் மற்றும் சிறுநீர்ப்பை இறங்கியிருத்தல், மலக்குடல் இறங்கியிருப்பது, நீங்கள் அமர்ந்தே பணிபுரியும் நபர் என்றால் நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் விதமும் உங்களின் முதுகு வலிக்கு காரணமாகிறது. ஒரு நாளில் 8 முதல் 10 மணி நேரம் அமர்ந்து வேலை செய்யும்போது, அமரும் நிலையும் காரணமாகும்.
தீர்வுகள்
காரணத்தை கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு ஏற்ற நிவாரணம் கொடுக்கும்போதுதான் அது குணமாகிறது. இதற்கு வீட்டிலிருந்தே நீங்கள் செய்யக்கூடிய எளிய தீர்வு ஒன்று உள்ளது.
தேவையான பொருட்கள்
சுக்கு – அரை இன்ச்
கருப்பட்டி – 1 ஸ்பூன் (பொடித்தது)
செய்முறை
சுக்கை தட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். அது அரை டம்ளர் என சுண்டியவுடன், அதில் கருப்பட்டி மற்றும் சேர்த்து பருகவேண்டும். இதை உங்களுக்கு வலி இருக்கும் நேரத்தில் ஒரு நாளைக்கு ஒருமுறை என மூன்று நாட்களுக்குப் பருகவேண்டும். வலி இருக்கும்போது, கட்டாயம் பருகவேண்டும். இது உங்கள் உடலில் அதிகப்படியான வாதங்களையெல்லாம் குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்