Baby Names : கடலிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல குழந்தைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Baby Names : கடலிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல குழந்தைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!

Baby Names : கடலிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல குழந்தைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 12:14 PM IST

கடலிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்களை உங்கள் செல்ல குழந்தைகளுக்காக தேர்ந்தெடுங்கள்.

Baby Names : கடலிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல குழந்தைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!
Baby Names : கடலிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் செல்ல குழந்தைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!

நீரஜ்

நீரஜ் என்றால் தண்ணீரில் இருந்து பிறந்தவன் என்று பொருள். இந்தப் பெயர் புனிதம், தூய்மை, புதுப்பிப்பு மற்றும் எல்லையற்று விரிந்து கிடப்பது, தண்ணீரில் பரவல், வாழ்வின் அமைதி, நிசப்தம் போன்ற அர்த்தங்களைக் கொடுக்கும்.

சிந்து

சிந்து என்ற பெயரை குறிப்பிடும்போதே அந்தப்பெயர் நதி அல்லது கடலின் பரந்து கிடக்கும் திறகை மனதுக்கு கொண்டு வருகிறது. நீர்த்தன்மை, தொடர்ச்சி மற்றும் வாழ்க்கை பயணத்தில் முடிவின்மை போன்ற அர்த்தங்களை இந்தப்பெயர் கொடுக்கிறது.

வருணவி

வருணவி என்ற பெயர் வருண பகவானிடம் இருந்து பெறப்பட்ட பெயர். வருணவி என்றால் தண்ணீரின் கடவுள் என்று பொருள். இந்தப் பெயர் பெருங்கடலுடன் தொடர்பு கொண்டவர் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது. பரந்து விரிந்த, வளர்த்தெடுக்கும், வாழ்வாதாரம் என தண்ணீரின் குணங்களை இந்தப்பெயர் குறிக்கிறது.

ஜானவி

ஜானவி என்றால் கடல் அன்னையின் புனித குழந்தை என்ற அர்த்தத்தை இந்தப்பெயர் கொடுக்கிறது. இந்தப் பெயர் புனிதம், தூய்மை, ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ஆன்மீகம் மற்றும் இயற்கையுடன் சிறந்த தொடர்பில் இருக்கும் நபர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

சாகரிக்கா

சாகரிக்கா என்ற வார்த்தை சாகாரா என்பதில் இருந்து தோன்றியது ஆகும். இந்தப் பெயருக்கு அலைகள் என்று பொருள். இது வாழ்வின் இசை, இனிமைக மற்றும் கடலின் பரவல், நீண்ட தொடர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் பெயராகும்.

ஆர்னவ்

ஆர்னவ் என்றால், கடலின் தொடர் இயக்கம், அலையின் ஆற்றல், விரிவான மற்றும் தொடர் ஆற்றல் ஓட்டம் ஆகிய அர்த்தங்களைக் கொடுக்கிறது. வாழ்வில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்பதையும் இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.

தாரங்க்

தாரங்க் என்றால் அலை என்று சமஸ்கிருதத்தில் பெயர், இந்தப்பெயர் தொடர் இயக்கம் என்பதைக் குறிக்கிறது. இதற்து இசை, இதம், தண்ணீரின் பல பரிமாணம் என்பதைக் குறிக்கிறது. இது வாழ்வின் தொடர்ச்சியான ஓட்டம என்பதையும் குறிக்கிறது. பரந்த சாத்தியக்கூறுகள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

வருண்

வருண் என்றால் மழை, கடல், தண்ணீரின் கடவுள் வருண பகவானைக் குறிக்கும் பெயராகும். இந்தப்பெயருக்கு கட்டுப்பாடு, சமநிலை என்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப் பெயரைக் கொண்டவர்கள் கட்டுப்பாடு மற்றும் வாழ்வில் சமநிலையைப் பேணுவார்கள். தண்ணீர் எப்படி வாழ்வின் ஆதாரமோ அதுபோன்றது என்பதைக் குறிக்கிறது.

தாரிணி

தாரிணி என்றால் பாதுகாப்பவர் என்று பொருள். முன்னோக்கிச் செல்பவர் என்பது இதன் பொருள். வாழ்வின் அலைகளை கடந்து வாழ்க்கைப் பயணத்தில் ஓடிக்கொண்டே இருப்பவர் என்பதை இந்தப் பெயர் குறிக்கிறது. இந்தப்பெயர் கடலைப்போல், வழிகாட்டுதல், மீண்டெழும் திறன் மற்றும் தெய்வீக ஆதரவு மற்றும் ஆன்ம வழிகாட்டி ஆகியவற்றைக் குறிக்கிறது.

சாகர்

இந்தப்பெயரும் கடலின் பெயராகும். இதற்கு ஒருவர் பரந்துபட்டவர் என்பதைக் குறிக்கும். கடலின் ஆழத்தைக் குறிக்கும். அற்புதங்கள் மற்றும் ரகசியங்கள் நிறைந்தவர் என்பதைக் குறிக்கிறது. இது ஆழ்ந்த குணம் மற்றும் எல்லையற்ற உணர்ச்சிகள் என்பதைக் குறிக்கிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.