Baby Names : அழகிய பூக்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், உங்கள் இல்லத்தை அலங்கரிக்கட்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Baby Names : அழகிய பூக்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், உங்கள் இல்லத்தை அலங்கரிக்கட்டும்!

Baby Names : அழகிய பூக்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், உங்கள் இல்லத்தை அலங்கரிக்கட்டும்!

Priyadarshini R HT Tamil
Feb 04, 2025 10:31 AM IST

Baby Names : அழகிய பூக்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக வழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

Baby Names : அழகிய பூக்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், உங்கள் இல்லத்தை அலங்கரிக்கட்டும்!
Baby Names : அழகிய பூக்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்கள், உங்கள் இல்லத்தை அலங்கரிக்கட்டும்!

ஜீஹி

ஜீஹி என்றால் மல்லிகை என்பதன் அர்த்தமாகும். இதற்கு மல்லிகையின் மணம், தூய்மை, நளினம், எழில், அழகு, தெய்வீகத்தன்மை என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. மல்லிகை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் மதுரையில் மிகவும் புகழ்பெற்ற மலராகும். இந்த மலர் இறைவன் கிருஷ்ணனுடன் தொடர்புடையது. இதை பல்வேறு மதச்சடங்குகளிலும் மக்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஷால்மலி

ஷால்மலி என்றால் இலவம் பஞ்சு மரம் என்று பொருள். இதில் பிரகாசமான சிவப்பு மலர்கள் மலரும். இந்து இதிகாசங்களில் இந்த மரம் தெய்வீ சக்தியுடன் தொடர்புகொண்டது. இதற்கு பலம், மீண்டெழும் குணம் மற்றும் அழகு என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப்பெயர் உங்கள் குழந்தைகளுக்கு தனித்தன்மையான அர்த்தமுள்ள தேர்வாகும்.

சவுகந்திகா

சவுகந்திகா என்பது மாயமானது என்பதைக் குறிக்கும் அரிய, தெய்வீகத்தன்மைகொண்ட மலரின் பெயராகும். இந்தப் பெயர் இந்து இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள பெயராகும். இந்த பூவின் மணம் மற்றும் அழகும் இறைவன் அனுமனுடன் தொடர்புகொண்து. இது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயராகும்.

அர்னித்

அர்கித் என்பது அரிதான பெயர். இதற்கு அழகிய மலரைப் போன்ற தோற்றம் கொண்டவர் என்று பொருள். இதற்கு அப்பாவி, புத்துணர்வு மற்றும் வசீகரம் போன்ற எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்தப்பெயர் ஒரு மார்டன் பெயராகும். இதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. இது உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல பெயராகும்.

பாரிஜாதம்

பாரிஜாதம் என்றால், இந்திய இதிகாசத்தில் வரும் பெயராகும். இது வானில் உள்ள பொருள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். இந்தப்பெயர் கடலில் இருந்து தோன்றிய என்று பொருள். இந்தப் பெயர் தெய்வீக அன்பு என்பதைக் குறிக்கிறது. இது இறைவன் கிருஷ்ணருடன் தொடர்புகொண்ட பெயராகும். இந்தப் பெயருக்கு தெய்வீக வசீகரம் மற்றும் மாயமான என்ற பொருளும் உள்ளது.

கேடகி

கேடகி என்றால் புனிதமான மலர் என்று பொருள். இது இந்திய இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள பெயராகும். இது அதன் நறுமணம் மற்றும் இனிமைக்கு புகழ்பெற்ற மலர். இந்த பூ தெய்வீகம், வசீகரம் மற்றும் தனித்தன்மை என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. இந்தப் பூ இந்திய இதிகாசத்தில் தொடர்புடையது என்பதால் கோயில் விழாக்கம் மற்றும் முக்கிய திருவிழாக்களில் தெய்வத்துக்கு படைக்கப் பயன்படுத்தப்படும் மலராகும்.

பல்லவி

பல்லவி என்றால், புதிய இலைகள் என்றும் அல்லது முதலில் மலர்ந்து எனவும் பொருள் தரும். இதற்கு புத்துணர்வு, வாழ்வு, வளம் மறறும் முதல் துவக்கம் என எண்ணற்ற பெயர்களைக் கொடுக்கும் பெயராகும். இது பரவலாகப் பயன்படுத்தப்படும் பெயராகும். இது இந்திய இசையில் பரவலாக இடம்பெறும் பெயராகும். பாட்டின் அறிமுகப் பகுதிக்கு பல்லவி என்று பொருள். இது இசைமயமான மற்றும் அர்த்தமுள்ள பெயராகும்.

அபாரஜித்தா

அபாரஜித்தா என்றால், வெற்றிகொள்ள முடியாத என்று பொருள். இது ஊதா வண்ணம் கொண்ட பூ. சங்குப்பூ என்று தமிழில் அழைக்கப்படும் எண்ணற்ற நற்குணங்கள் கொண்ட பெயர். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இது மதச்சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பெயருக்கு பலம், வெற்றி மற்றும் தெய்வீக ஆற்றல் என்று பொருள். இது சக்திவாய்ந்த உங்கள் வீட்டு தேவதைகளுக்கு ஏற்ற பெயராகும்.

தாமரா அல்லது தாமரை

இது தாமரை மலரைக் குறிக்கும் சமஸ்கிருதப் பெயராகும். இதற்கு தூய்மை, வளர்ச்சி, உள்பலம் என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. இந்த நளினமான பெயருக்கு, காலத்தை வென்ற தரமான என்ற ஒரு பொருள் உள்ளது. இது ஆழ்ந்த தெய்வீக குணம் கொண்டவர்கள் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டவர்கள் என எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.