குழந்தைகளின் பெயர்கள் : ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ வெண்ணிற பூக்களிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு பெயர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகளின் பெயர்கள் : ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ வெண்ணிற பூக்களிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு பெயர்கள்!

குழந்தைகளின் பெயர்கள் : ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ வெண்ணிற பூக்களிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 13, 2025 10:13 AM IST

வெள்ளை நிறப்பூக்களிடம் இருந்து உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அவை என்னவென்று பாருங்கள்.

குழந்தைகளின் பெயர்கள் : ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ வெண்ணிற பூக்களிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு பெயர்கள்!
குழந்தைகளின் பெயர்கள் : ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ வெண்ணிற பூக்களிடம் இருந்து பெண் குழந்தைகளுக்கு பெயர்கள்!

ஷர்வானி

ஷர்வானி என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவான பெயராகும். இதற்கு புனிதமான மற்றும் தூய்மையான என்று அர்த்தம். இது பெண் தெய்வங்களுக்கு படைக்கப்படும் மலர்களுடன் தொடர்புகொண்ட பெயராகும்.

மல்லிகா

மல்லிகா என்றால் மல்லிகை என்ற வெண்ணிற மலரிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இது மிருதுவான, மனம் வீசும் நளினமான பெயராகும். இதை உங்கள் பெண் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டலாம்.

ஹசிதா

ஹசிதா என்றால் வெள்ளை மலர் என்று பொருள். இது எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. இதற்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோசம் என்ற பொருளும் உள்ளது.

குமுத்

குமுத் என்றால் தாமரை என்று பொருள். தாமரை அல்லது அல்லி என்ற இரு வெள்ளை மலர்களையும் குறிப்ழும். இதற்கு அழகு மற்றும் தூய்மை என்ற இரு அர்த்தங்கள் உள்ளன.

ஷர்வாங்கி

ஷர்வாங்கி என்ற பெயர், வெள்ளை மலர்களுடன் தொடர்பு கொண்டது. தூய்மை அல்லது வெள்ளை உடல் என்ற அர்த்தத்தை இந்தப் பெயர் கொடுக்கிறது.

கமல்க்ஷி

கமல்க்ஷி என்றால் அதற்கு வெள்ளைத்தாமரை என்று பொருள். இது ஒரு சமஸ்கிருதப் பெயராகும். இது அமைதி, செழுமை என்பவற்றுடன் தொடர்பு கொண்டது. உங்கள் மகள் உங்கள் வீட்டுக்கு அமைதியையும், செழுமையையும் கொண்டு வந்தவர் என்பதை இந்தப் பெயர் குறிப்பிடுகிறது.

வைதேகி

வைதேகி என்பது சீதையின் மற்றொரு பெயராகும். இது வெள்ளை மல்லிகை மலர்களுடன் தொடர்புடைய பெயராகும்.

யுதிகா

யுதிகா என்பது சமஸ்கிருதப் பெயர். இது வெள்ளை மல்லிகையிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். மணம் வீசும் மல்லிகை உங்கள் மனம் நிறையும். உங்கள் மகளின் வருகையும் அதுபோல்தான் என்பதைக் குறிக்கும். இதற்கு அன்பு மற்றும் அமைதி என்ற அர்த்தமும் உண்டு. உங்கள் மகள் உங்கள் வீட்டுக்கு அன்பையும், அமைதியையும் கொண்டுவந்தவர் என்பதைக் குறிக்கிறது.

ரமிஷா

ரமிஷா என்ற பெயர் வெள்ளை ரோஜாவைக் குறிக்கும் பெயராகும். இதற்கு எளிமை, நளினம், கருணை என்ற எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது.

விமலிகா

விமலிகா என்ற பெயர் விமலா என்ற பெயரில் இருந்து தோன்றிய பெயராகும். இதற்கு தூய்மை என்று பொருள். இது வெள்ளை தாமரையைப் போல் தூய்மையான மலர் என்பதைக் குறிக்கும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை மலர்களின் பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் அமைதி, மென்மை, தூய்மை, கருணை போன்ற குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பொருள்.