உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிறைக்கும் நபர் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிறைக்கும் நபர் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள்!

உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிறைக்கும் நபர் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 04, 2025 04:45 PM IST

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிறைக்கும் நபர் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள்!
உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை நிறைக்கும் நபர் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள்!

அனயா

அனயா என்றால், அன்பு, அக்கறை, அனுதாபம் என்று பொருள். உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் இந்த உலகில் அன்பை விதைக்கட்டும் என்று விரும்பினால் இந்தப்பெயரை உங்கள் பெண் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் கருணையால் அந்த இடத்தை நிறைப்பார்கள்.

மைரா

மைரா என்றால், வசீகரம் என்று பொருள். மைரா என்றால் அன்பு மற்றும் கவர்ந்து இழுக்கக் கூடிய நபர் என்று பொருள். இந்தப்பெயரும் மார்டன் பெயர்தான். இந்தப்பெயரை இந்தியக் குடும்பங்கள் அதிகளவில் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இரா

இரா என்பது மிகவும் சிறிய மற்றும் அழகான பெயராகும். இந்தப்பெயருக்கு ஆன்மீக அடையாளம் என்று பொருள். ஆன்மீக தனித்துவம் கொண்ட நபர் என்று பொருள். இந்தப்பெயர் கிரியேட்டிவிட்டி, அறிவு மற்றும் இயற்கையுடன் ஆழ்ந்த தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப்பெயர் மிகவும் குட்டியான மற்றும் க்யூட்டான பெயராகும்.

கைரா

கைரா என்றால், தனித்துவம் கொண்ட மற்றும் அமைதியான என்று பொருள். இந்தப்பெயர் மார்டன் பெயராகும். இந்தப்பெயர் தங்கள் குழந்தை தனித்துமாக சாதிக்க விரும்பும் நபராக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்ட பெற்றோருக்கு ஏற்றது. அவர்களின் பெண் குழந்தைகள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்பதையும் இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.

ஆன்யா

ஆன்யா என்றால் எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்டவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தப்பெயருக்கு ஆற்றல் அதிகம் கொண்ட நபர் என்ற பொருளும் உள்ளது. இந்தப்பெயர் நேர்மறையானவர் மற்றும் எதிர்காலத்தின் நம்பிக்கை என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது.

தாரா

தாரா என்ற பெயர் எல்லா காலத்துக்கும் ஏற்ற பெயராகும். இந்தப்பெயர் வழிகாட்டும் நபர் மற்றும் புத்திகூர்மையானவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இந்தபெயரை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டினால் அவர்கள் உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூளையிலும் ஒளியேற்ற வந்தவர் என்று அறியப்படுகிறார். தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். எனவே நட்சத்திரத்தைப்போல் உங்கள் வீட்டில் ஒளியை பரப்ப வருகிறார் என்று அர்த்தம்.

அவ்னி

அவ்னி என்றால் அழகான மற்றும் மார்டன் பெயராகும். இந்தப்பெயருக்கு இயற்கையுடன் தொடர்புகொண்டவர் என்ற அர்த்தம் வருகிறது. இந்தப்பெயர், நிலையான என்ற பொருளைக் கொடுக்கிறது. உங்கள் குழந்தைக்கு அர்த்தமுள்ள பெயரை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் தாராளமாக இந்தப்பெயரை தேர்ந்தெடுக்கலாம்.

சாரா

சாரா என்பது அதிகளவில் புழக்கத்தில் உள்ள பெயர்தான். இந்தப்பெயர் பணக்காரத் தோற்றத்தைக் கொடுக்கக்கூடிய பெயர். இந்தப்பெருக்கு நேர்த்தியான, வசிகரமான, தன்னம்பிக்கை நிறைந்த என எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன. இந்தப்பெயருக்கு பிரகாசமான என்ற பொருளும் உள்ளதால் உங்கள் வீட்டில் பிரகாசம் நிரம்பு வழியும். இந்தப் பெயரைக் கொண்ட நபர் உற்சாகமானவராக இருப்பார்.

சான்வி

சான்வி என்பது ஆன்மீக அடையாளம் கொண்ட பெயர். இது மார்டன் பெயரும் ஆகும். இந்தப்பெயருக்கு தெய்வீக குணம் மற்றும் தூய்மை குணம் என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. இந்தப்பெயருக்கு உங்கள் வாழ்வில் செல்வத்தைக் கொண்டு வரும் நபர் என்ற அர்த்தம் உள்ளது. இந்தப்பெயருக்கு மகிழ்ச்சி என்ற மற்றொரு பொருளும் உள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.