Baby Boy Names : உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அழகான உருது மொழிப்பெயர்கள்! அழகும், அர்த்தமும் நிறைந்தவை!
Baby Boy Names : உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அழகான உருது மொழிப்பெயர்கள்! அழகும், அர்த்தமும் நிறைந்தவை!
உங்கள் ஆண் குழந்தைகளுக்கு உருது மொழிப்பெயர்களை தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
அர்த்தமுள்ள ஆண் குழந்தைகளின் பெயர்கள்
உங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெயர்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை மிகவும் முக்கியமான வேலை. ஏனென்றால் அந்தப் பெயர்தான் எப்போதும் அவர்களின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கப்போகிறது.
எனவே ஆண் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுக்கும்போது, அவை கவித்துவமானதாக, அழகானதாக, அர்த்தமுள்ளதாக, முக்கியத்துவமானதாக அல்லது கலாச்சார பாரம்பரியம் கொண்டதாக இருக்கவேண்டும்.
இங்கு உருது மொழியில் சில ஆண் குழந்தைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு அர்த்தம் உள்ளது. அவை கேட்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்டவையும் ஆகும்.
ஆரிஷ்
ஆரிஷ் என்றால், மரியாதையானவர், அறிவாளி என்று பொருள். ஆரிஷ் என்ற பெயர், கண்ணியம், ஞானம் என உருது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது.
கியான்
கியான் என்றால் அரசன், ஆள்பவர் என்று பொருள். இந்த அழகிய உருது பெயர், தலைமைப்பண்பு மற்றும் ராஜாக்கள், பிரபுக்களை குறிக்கும் பெயராகும்.
அயான்
அயான் என்றால் கடவுளின் பரிசு என்று பொருள். அயான் என்பது மிகவும் புகழ்பெற்ற பெயராகும். இது மதிப்புமிக்க ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை குறிக்கும் பெயராகும். இது கடவுளிடம் இருந்து கிடைத்த வெகுமானம் என்ற அர்த்தத்தை தருகிறது.
சாய்ட்
சாய்ட் என்றால் வளர்ச்சி, அதிகப்படியான என்று பொருள். சாய்ட் என்பது செல்வம் மற்றும் வளர்ச்சியைக் குறிக்கிறது. இது நேர்மறையான தோற்றத்தை குறிக்கிறது. குழந்தையின் எதிர்காலம் நேர்மறையாக இருக்கும் என்பதை உணர்த்தும் பெயர் ஆகும்.
ராயான்
ராயான் என்றால், சொர்கத்தின் வாசல் படி என்று பொருள். ராயான் என்பது ஒரு அழகிய பெயர். இதற்கு ஆன்மீகம், கற்பனை, சொர்க்கத்துக்கு செல்லும் வழி என்ற பல அர்த்தங்கள் உள்ளன.
சாட்
சாட் என்றால், செல்வம் மற்றும் மகிழ்ச்சி என்று பொருள். சாட் என்ற பெயரை எந்த காலத்திற்கும் வைக்கலாம். உங்களுக்கு இது மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டு வந்து தரும். உங்கள் குழந்தையின் மனமகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஹைடெர்
ஹைடெர் என்றால், சிங்கம் என்று பொருள். சிங்கம் காட்டின் ராஜாவான விலங்கு. அது தைரியம் மற்றும் பலத்தை காட்டுகிறது. இதை தலைமைப்பண்பு மற்றும் வீரத்துடன் எப்போதும் தொடர்புபடுத்திக் கூறுவார்கள். உங்கள் குழந்தைகளும் வீரமிக்கவர்களாக வேண்டுமெனில் இந்தப் பெயரை அவர்களுக்கு சூட்டுங்கள்.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்