ஆயுர்வேதம் : ஆயுர்வேதத்தில் உள்ள அற்புதம்; உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆயுர்வேதம் : ஆயுர்வேதத்தில் உள்ள அற்புதம்; உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்!

ஆயுர்வேதம் : ஆயுர்வேதத்தில் உள்ள அற்புதம்; உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்!

Priyadarshini R HT Tamil
Published Jun 15, 2025 12:51 PM IST

ஆயுர்வேதம் : ஆயுர்வேதம் ஒரு நல்ல தீர்வை நோய் எதிர்ப்பு வளர்வதற்கு வழங்குகிறது. அதற்கு உதவக்கூடிய ஆயுர்வேத மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆயுர்வேதம் : ஆயுர்வேதத்தில் உள்ள அற்புதம்; உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்!
ஆயுர்வேதம் : ஆயுர்வேதத்தில் உள்ள அற்புதம்; உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவும்!

குழந்தைகளுக்கு, ஒரு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் தேவை. குழந்தையிலேயே நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்தால்தான், அவர்கள் வளர்ந்தவுடன் அவர்களால் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக செயல்படமுடியும். குழந்தைகளுக்கு வளரக்கூடியதாகத்தான் நோய் எதிர்ப்பு மண்டலம் இருக்கும்.

ஆயுர்வேதம் ஒரு நல்ல தீர்வை நோய் எதிர்ப்பு வளர்வதற்கு வழங்குகிறது. அதற்கு உதவக்கூடிய ஆயுர்வேத மூலிகைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா யாஷ்டிமது என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைரசுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளன. அது நோய் ஏற்படுத்தும் கிருமிகள் உடலில் பரவுவதை தடுக்கிறது. இதை நீங்கள் ஒரு சிறிய துண்டு அல்லது சிட்டிகை தண்ணீரில் கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

துளசி

துளிசி, புனிதமான தாவரமாக இந்துக்கள் கருதுகிறார்கள். இது இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கிய தாவரமாகவும் உள்ளது. இதில் பைஃட்டோநியூட்டியன்ட்கள் அதிகம் உள்ளது. தேவையான எண்ணெய், வைட்டமின் ஏ மற்றும் சி சத்து ஆகியவை உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. பாக்டீரியா தொற்றுக்களையும் போக்குகிறது. துளசியின் அதிக பலன்களை பெறுவதற்கு குழந்தைகளுக்கு துளசியை மெல்லக்கொடுங்கள். அதை தண்ணீரில் சேர்த்து அந்த நீரையும் குழந்தைகளை பருகச்செய்யலாம்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா என்ற ஆயுர்வேத மூலிகைகளிலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உட்பொருட்கள் உள்ளன. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைய உதவுகிறது. காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கிறது. இதை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வல்லாரை

வல்லாரை வல்லாரை பகோபா மொன்னிரியில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய பலன்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. கற்றல் மற்றும் கேட்டல் திறன்களை அதிகரிக்கிறது. குழந்தையின் மனஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த மூலிகை மிகவும் உதவுகிறது. கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மட்டுமல்ல, குழந்தையின் மனதை அமைதிப்படுத்தி, சமமான மனநிலையின் வளரும் காலத்தில் உருவாக்குகிறது.

வசம்பு

வசம்பு அல்லது அகோரஸ் கலாமஸ் பாரம்பரிய ஆயுர்வேத மூலிகை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை சரிசெய்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரிசெய்கிறது. அழற்சிக்கு எதிராக செயல்டுகிறது. மூளை ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது.