Ayurveda Eye Health Secrets: கண் பார்வையை மேம்படுத்த பராமரிக்க வீட்டிலேயே செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ayurveda Eye Health Secrets: கண் பார்வையை மேம்படுத்த பராமரிக்க வீட்டிலேயே செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள்

Ayurveda Eye Health Secrets: கண் பார்வையை மேம்படுத்த பராமரிக்க வீட்டிலேயே செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள்

Marimuthu M HT Tamil
Jun 25, 2024 11:41 PM IST

Ayurveda Eye Health Secrets: நல்ல கண் பார்வையை மேம்படுத்தவும் பராமரிக்கவும் வீட்டிலேயே செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் குறித்துப் பார்ப்போம்.

Ayurveda Eye Health Secrets: கண் பார்வையை மேம்படுத்த பராமரிக்க வீட்டிலேயே செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள்
Ayurveda Eye Health Secrets: கண் பார்வையை மேம்படுத்த பராமரிக்க வீட்டிலேயே செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள்

கண் ஆரோக்கியம்:

இவை தவிர சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள், ஒவ்வாமை, சூரிய பாதிப்பு, வயது தொடர்பான மாகுலர் சிதைவு, நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் கிளௌகோமா ஆகியவை நம் கண் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணங்களில் அடங்கும். 

மோசமான உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை, வறண்ட கண்கள், கண் எரிச்சல் போன்றவை கண் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஆயுர்வேதத்தில் கூறும் சில டிப்ஸ்!

கண்கள் மிக முக்கியமான புலனுறுப்பாக கருதப்படுகிறது. காலப்போக்கில், வயது, வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் மரபணு காரணிகள் உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களால் நமது பார்வை பலவீனமடையக்கூடும். 

உங்கள் கண் பார்வையை மேம்படுத்த செய்யவேண்டிய சிகிச்சைகள் மற்றும் பண்டைய மூலிகைகளின் பட்டியலை டாக்டர் பிரேம்சங்கர் பகிர்ந்து கொள்கிறார்.

1. திரிபலா: மூன்று பழங்களின் கலவையானது திரிபலா என்று அழைக்கப்படுகிறது. இது பார்வையை மேம்படுத்தும் திறன் கொண்டது. திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் 1:2:3 விகிதத்தில் கலந்து கிடைப்பதாகும்.

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.  இவை அழுத்தத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. இந்த மூலிகை பல்வேறு கண் பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

2. சரிவிகித உணவு: வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் பி ஆகியவற்றை உள்ளடக்கிய புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு சிறந்த பார்வையை பராமரிக்க உதவுகிறது. நெய், தேன், பார்லி, கோதுமை, பழைய அரிசி ஆகியவற்றை நம் உணவில் சேர்ப்பது நல்ல கண் ஆரோக்கியத்தைத் தக்கவைக்க அவசியம்.

3. அஞ்சனா மற்றும் நஸ்யா: கண்கள் பெரும்பாலும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. அஞ்சனாவை (கோலிரியம்) பயன்படுத்துவது (மூலிகைகளால் செய்யப்பட்ட ஐலைனர்) மற்றும் நாஸ்யத்தை (மூக்கு வழியாக மருந்துகளின் ஊடுருவல்) தவறாமல் பயன்படுத்துவது கண்களைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கபத்தை அகற்றவும் உதவுகிறது.

4. பாத மசாஜ்: பாத மசாஜ் (எண்ணெயுடன் பாத மசாஜ்) செய்வது பார்வையைப் பாதுகாக்க பரிந்துரைக்கப்படுகிறது.

5. உற்றுப்பார்க்க வேண்டாம்: உற்றுப்பார்ப்பது  அறிவுறுத்தப்படுவதில்லை. ஏனெனில் இது கடுமையான கண் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

6. த்ராடகம்: எரியும் நெய் தீபத்தைப் பார்ப்பது 'த்ராடகம்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆயுர்வேத கண் உடற்பயிற்சி. ஒரு நாளின் பத்து நிமிடங்களை ஒரு இருண்ட அறையில் உட்கார்ந்து நெய் விளக்கை வைத்து சுடர் 30 டிகிரி கோணத்தில் தெரியும் என்பதை உறுதி செய்து அதை சீராக உற்றுப் பாருங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் பார்வை மற்றும் கண் வலிமையை மேம்படுத்தலாம்.

7. கிரியா கல்பா: மருந்து நெய் மற்றும் பிற சூத்திரங்களை உள்ளடக்கிய ஆயுர்வேத கண் சிகிச்சைகள் கிரியா கல்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தர்ப்பணம், புடபகா, சேகா, அஞ்சனா, அஸ்கியோட்டானா, பிண்டி மற்றும் பிடலகா போன்ற பல்வேறு கிரியா கல்ப சிகிச்சைகள் கண் ஆரோக்கியத்திற்கு சிகிச்சையளிப்பதிலும் பாதுகாப்பதிலும் திறன்மிக்கவை.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.