Acidity Foods: நெஞ்சு எரிச்சலுக்கு வீட்டு வைத்தியத்தை நம்பி இருக்கீங்களா? நிலைமை மோசமாகலாம்!
Acidity Foods: சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் என்பது பலரைத் தொந்தரவு செய்யும் ஒன்று. நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் என்பது உணவுக்குழாயில் இருந்து இரைப்பை அமிலத்தின் ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படுகிறது.

பாரம்பரிய உணவு பழக்கம் மாறி துரித உணவுகளின் பின்னே செல்லும் தலைமுறையாக இது மாறி வருகிறது. இதன் காரணமாகவே நமது உடல் நலமும் பாதிப்படைகிறது. ஆனால் இவை அனைத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைமுறையாகவும் உள்ளனர். இவர்களின் அலட்சியத்தால் பெரும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் இதனை ஆரம்பத்திலேயே குறைக்க விட்டால் உடலின் ஆரோக்கியம் பெருமளவு பாதிக்கப்படும். நீங்கள் அடிக்கடி சாப்பிடும் உணவுகளோடு சேர்ந்து குடிக்கும் பானங்கள் கூட நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே ஒரு உணவின் தன்மை அறிந்து அதனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நெஞ்செரிச்சல்
சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் என்பது பலரைத் தொந்தரவு செய்யும் ஒன்று. நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் என்பது உணவுக்குழாயில் இருந்து இரைப்பை அமிலத்தின் ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் நெஞ்செரிச்சலுக்கு வீட்டு வைத்தியத்தை நம்பியிருக்கிறார்கள். ஆனால் அவை எப்போதும் பலனளிக்காது. மேலும் சில வீட்டு வைத்தியங்கள் நிலைமையை மோசமாக்க வாய்ப்புள்ளது.
பெரும்பாலான சமயங்களில் அசிடிட்டி ஏறபட்ட உடன் வீட்டில் உள்ளவர்கள் தற்காலிக தீர்வை நோக்கியே செல்கின்றனர். உங்களுக்கு நெஞ்செரிச்சல் இருக்கும்போது இந்த மூன்று பானங்களையும் குடிப்பதைத் தவிர்க்கவும்.
எலுமிச்சை தண்ணீர்
நெஞ்செரிச்சலைப் போக்க பலர் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பார்கள். எலுமிச்சையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், எலுமிச்சை நீர் நெஞ்செரிச்சலுக்கு நல்ல மருந்தல்ல. எலுமிச்சை நீர் அமிலத்தன்மை கொண்டது மற்றும் நெஞ்செரிச்சலை நீக்குவதற்குப் பதிலாக அதை மோசமாக்கும் வாய்ப்பு அதிகம் கொண்டுள்ளது. எனவே உடனே இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சோடாக்கள்
பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளுடன் சோடா குடிப்பது தற்போது பழக்கமாகிவிட்டது. இது செரிமானத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. ஆனால் சோடாவில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இது வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கும். அதிக அழுத்தம் வயிற்றில் அமிலம் மீண்டும் பாய்வதற்கு வழிவகுக்கும். சோடா குடிப்பதால் வயிற்று வலி ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது.
ஆப்பிள் சைடர் வினிகர்
மேலும், நெஞ்செரிச்சலை போக்க ஆப்பிள் சைடர் வினிகரை பலர் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அது அமிலத்தன்மை கொண்டது. ஆப்பிள் சைடர் வினிகரை குடிப்பதால் அமில ரிஃப்ளக்ஸ் மோசமடையலாம். எரிச்சல் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு
எதனை குடிக்க வேண்டும்
நெஞ்செரிச்சல் ஏற்படும் போது அமிலத்தன்மை இல்லாத பானங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மூலிகை தேநீர் அல்லது வெறும் நீர் போன்றவை உதவும். இது அமில ரிஃப்ளக்ஸ் மோசமடையாமல் வயிற்றை ஆற்ற உதவும். மேலும் சாதாரண தேநீர் கூட உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்