Aval Upma : பத்து நிமிடத்தில் பட்டுன்னு செஞ்சிடலாம்; சின்ன வெங்காய அவல் உப்புமா! சூப்பர் ஸ்னாக் ரெசிபி!
Aval Upma : உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள் இப்படி ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் இருந்தால், அது என்ன தெரியுமா?
பொதுவாகவே மாலை வேளைகளில் டீயுடன் சேர்த்து சாப்பிட, ஏதாவது ஸ்னாக்ஸ் தேவைப்படும். அதற்கு வழக்கமாக பஜ்ஜி, போண்டாக்கள் போரிங்கான ஒன்றுதான். அதுமட்டுமின்றி எண்ணெயில் பொரித்து எடுப்பதால் உடலுக்கும் கெடுதலை ஏற்படுத்தும்.
அதனால், இந்த அவல் உப்புமா போன்ற ஸ்னாக்ஸ்கள் உங்கள் உடலுக்கும் ஆரோக்கியம் தரும். வித்யாசமான ஈவ்னிங் ஸ்னாக்சாகவும் இருக்கும். இதை அடிக்கடி செய்து சாப்பிடும்போது உங்கள் உடலின் ஆரோக்கியமும் பெருகும்.
உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஸ்னாக்சாகவும் இது இருக்கும். அவல் பெரும்பாலும் நமது வீடுகளில் பல்வேறு வகைகளில் உணவில் சேர்க்கப்படுகிறது. அதை உப்புமாவாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
அவல் – 2 கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த்துருவல் – அரை கப்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு பற்கள் – 4
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 3
வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
புளியை சிறிது தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவேண்டும். பின் மிக்ஸி ஜாரில் ஊறவைத்த புளி, மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கும் நேரத்தில் 2 கப் அவலை தண்ணீரில் கழுவிக் கொள்ளவேண்டும்.
தேங்காய் விழுது பச்சை வாசனை போக வதங்கியதும், கழுவிய அவலை லேசாக பிழிந்து சேர்த்துக் கொள்ளவேண்டும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக கிளறவேண்டும்.
அவலோடு எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும் வறுத்த வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவேண்டும். சூடாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாற வேண்டும்.
கெட்டி அவல் வைத்து செய்தால் அதை 20 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். நைஸ் அவல் என்றால் தண்ணீரில் சேர்த்தவுடனே எடுத்து பிழிந்துகொள்ள வேண்டும்.
இந்த உப்புமாவுக்கு மெலிதாக இருக்கும் அவல்தான் சுவையாக இருக்கும். எனவே அவலை வெங்காய விழுதை வதக்கும் போது தண்ணீரில் அலசினால் போதும்.
வேறு பாரம்பரிய அரிசி வகைகளின் அவலில் செய்தால், அந்தந்த அவலின் தன்மைக்கு ஏற்ப ஊறவைக்கும் நேரம் மாறுபடும். அனைத்து வகை அவலிலும் இந்த உப்புமாவை செய்யலாம்.
இது குழந்தைகள் விரும்பி சுவைக்கும் ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகும்.
அவலை நாம் பச்சையாக சாப்பிடுவோம். ஆனால் இதுபோல் உப்புமா செய்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாவிட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். இது செய்வதற்கு 10 நிமிடங்களே தேவைப்படும் என்பதால், உடனடியாக செய்து முடித்துவிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்