Breast Cancer: கவனம் பெண்களே.. 2040ல் 10 மில்லியன் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்க வாய்ப்பு- ஆய்வு தரும் ஷாக்!
Breast Cancer: ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மார்பகப் புற்றுநோயின் பெரும்பாலான பதிவுகள் வெளிவருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

Breast Cancer: உலக அளவில் இன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் மார்பக புற்றுநோய் மாறி விட்டது. குறிப்பாக இந்தியாவில் இந்த பாதிப்பு என்பது கூடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின். எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி செய்தி தான். மார்பக புற்றுநோயானது இப்போது உலகில் பெரும்பாலான மக்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோயாகும்.
2040 வாக்கில், இந்த நோய் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. புதிதாக வெளியிடப்பட்ட லான்செட் கமிஷன் இதை வெளிப்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் புள்ளிவிவரங்களின்படி, ஐந்து ஆண்டுகளில் சுமார் 7.8 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே ஆண்டில், சுமார் 685,000 பெண்கள் இந்த நோயால் இறந்தனர்.
உலகளவில், 2020 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனாக இருந்தது… 2040 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று ஆணையம் கணித்துள்ளது. 2040 ஆம் ஆண்டில், இந்த நோயால் ஆண்டுதோறும் பத்து மில்லியன் இறப்புகள் ஏற்படும். குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய சில நாடுகளில் இந்த புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மார்பகப் புற்றுநோயின் பெரும்பாலான பதிவுகள் வெளிவருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களை விட கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை, தாமதமான வயதில் திருமணம் செய்துகொள்வது, குழந்தைகள் தாமதமாகப் பிறப்பது, தாய்ப்பால் கொடுக்காதது போன்றவைதான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய்க்குக் காரணமாக அறியப்படுகிறது.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்
ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக, இந்த புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய முடியும். அக்குள் பகுதி கைக்குள் கட்டியாக உணர்வது மார்பக புற்றுநோயின் அறிகுறியாகும். மேலும், மார்பகத்தின் அளவு மாறினால், அது மென்மையாக மாறினால், அல்லது வடிவம் மாறினால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முலைக்காம்புகளில் நீர் அல்லது சீல் கசிந்து கொண்டிருந்தாலோ, அவற்றின் நிறத்தை மாற்றினாலோ அல்லது அளவு அதிகரித்தாலோ மார்பகப் புற்றுநோய் சந்தேகிக்கப்பட வேண்டும். மார்பகங்களில் அல்லது கட்டிகளில் வலி ஏற்பட்டால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
]மார்பில் சிறிய அளவில் பள்ளம் அல்லது குழி போன்று இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும். மார்பக தோல் மாற்றம் தடித்தல் ஆரஞ்சு பழ தோல் மாதிரி மாறுதல் மார்பில் புண்கள் மார்பகங்களில் எரிச்சல் வலி சுருங்கிய காம்புகள் காம்புகளை சுற்றி பொரிதல் என்று எந்த விதமான வித்தியாசத்தை உனரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த அவசியம் உள்ளது.
ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இளம் வயதினரிடம் புற்றுநோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவு, குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த மாதங்கள் மட்டுமே பாலூட்டுவது, கருத்தடை மாத்திரைகள் தொடர்ந்து பல வருடங்களாக மருத்துவர் ஆலோசனை இன்றி எடுத்து கொள்வது, மெனோபாஸ் போன்ற நேரங்களில் மருத்துவர் ஆலோசனை இன்றி ஹார்மோன் சிகிச்சை எடுத்து கொள்வது, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம். உடல் பருமன் கூட என்று பல காரணங்கள் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அது உயிரிழக்கும் முன்பே தடுக்கலாம். தற்போது, புற்றுநோயைத் தடுப்பதற்கான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மிகவும் எளிதாக குணமாகும். மூன்றாவது நிலை வரை மருத்துவவரை சந்தித்து ஆலோசனை பெறுவதில் உள்ள தயக்கமும் அலட்சியமுமே நமது உயிருக்கு ஆபத்தான சூழலை உருவாக்கும்.
பெண்கள் கண்ணாடி முன் நின்று சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கையை மார்பில் படுக்கை வசத்தில் வைத்து மெதுவாக தடவி கொண்டே வரும் போது மேடு பள்ளம் சிறிய அளவிலான கட்டிகள் வலி போன்ற ஏதாவது உணரும் பட்சத்தில் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்து கொள்ளும் போது ஆரம்ப நிலையில் உள்ள பிரச்சினையை எளிதில் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். அதேபோல் உடல் எடை பராமரிப்பு, தினமும் அரை மணி நேர நடைப்பயிற்சி, சிறிய அளவிலான உடற்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளும் பழக்கத்தை நமது தினசரி வேலையில் ஒன்றாக மாற்றுவதும் வரும் முன் காக்கும் விசயங்களாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்