Arugampul Juice Benefits : வாரத்தில் மூன்று நாள் மட்டும் இந்த ஜூஸ் போதும்! வியாதிகளை விரட்டியடிக்கும்!
Arugampul Juice : வாரத்தில் மூன்று நாள் மட்டும் இந்த ஜூஸ் குடிக்க வேண்டும். உங்கள் உடலில் உள்ள வியாதிகள் பறந்தோடும்.

தேவையான பொருட்கள்
அருகம்புல் – கைப்பிடியளவு
(கோயில் வாசல்களில் குறிப்பாக விநாயகர் கோயில் வாசல்களில் கட்டாயம் கிடைக்கும். அருகம்புல் கிடைக்கவில்லையெனில், அருகம்புல் பொடி எடுத்துக்கொள்ளலாம்)
இதில் உள்ள அதிகப்படியான குளோரோஃபில், உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தம் செய்து, புதுரத்தத்தை ஊறவைக்கும். உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டியை சரிசெய்யும். ரத்த சுத்தமின்மையால் ஏற்படும் சரும பாதிப்புக்களை குணப்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட நீர் எனப்படும் உப்பு நீரை வெளியேற்றும். சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளை வெளியேற்றும். மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுக்குள் வைக்கும். வாய்துர்நாற்றம், வயிற்றுப்புண் என அனைத்தையும் சரிசெய்யும்.
மூலத்தை முற்றிலும் அகற்றக்கூடிய தன்மை அருகம்புல்லுக்கு உண்டு. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். நரம்புகளில் உள்ள அடைப்புகளை நீக்கி நரம்பு தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்தும்.
இதை குறிப்பிட்ட அளவு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதிகளவு எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். இதைப்பயன்படுத்தி தயாரிக்கும் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருகினால் பலன் பன்மடங்கு கிடைக்கும்.
மிளகு – 3
அதிகம் மிளகு எடுத்தால் அல்சரை தூண்டிவிட்டுவிடும்
சீரகம் – அரை ஸ்பூன்
மோர் – ஒரு கப்
மோர் பிடிக்காதவர்கள் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
சுத்தம் செய்த அருகம்புல்லை, மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் மோருடன் சேர்த்து அரைத்து வடிகட்டி அதில் தேவையான அளவு மோர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
அருகம்புல் பொடியில் செய்வது எப்படி?
அருகம்புல் பொடி – அரை ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மோர் அல்லது வெதுவெதுப்பான் நீரில் அனைத்து பொடியையும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
மோர் பிடிக்கவில்லையெனில், தண்ணீர் கலந்து தேன் சேர்த்து பருகலாம். இதை வாரத்தில் 3 முறை பருக பல்வேறு நோய்கள் குணமாகும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் உடல் சோர்வைப் போக்கும். அவர்களுக்கு காரணமே தெரியாமல் உறக்கம் வரும் அவர்கள் இதை பருக பலன் உறுதி.
உடல் எடை குறைப்புக்கு உதவும். ஒரே மாதத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைக்க உதவும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகளும், சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்களும் இதை பருகலாம். கட்டாயம் முயற்சி செய்து பலன் பெறுங்கள்
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்