Arthritis: ஆயுசு முழுவதும் மூட்டு வலி வரக்கூடாதா? தினமும் காலை இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! ஒரு வாரத்தில் பலன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Arthritis: ஆயுசு முழுவதும் மூட்டு வலி வரக்கூடாதா? தினமும் காலை இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! ஒரு வாரத்தில் பலன்!

Arthritis: ஆயுசு முழுவதும் மூட்டு வலி வரக்கூடாதா? தினமும் காலை இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! ஒரு வாரத்தில் பலன்!

Priyadarshini R HT Tamil
Jan 30, 2024 10:17 AM IST

Arthritis: ஆயுசு முழுவதும் மூட்டு வலி வரக்கூடாதா? தினமும் காலை இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! ஒரு வாரத்தில் பலன்!

Arthritis: ஆயுசு முழுவதும் மூட்டு வலி வரக்கூடாதா? தினமும் காலை இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! ஒரு வாரத்தில் பலன்!
Arthritis: ஆயுசு முழுவதும் மூட்டு வலி வரக்கூடாதா? தினமும் காலை இதை மட்டும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! ஒரு வாரத்தில் பலன்!

எலும்பு தேய்மானத்தையும் சரிசெய்கிறது. எலும்புகளுக்கு நல்ல உறுதியை கொடுக்கிறது. ஆர்த்ரடிஸ் பிரச்னைகள் இருந்தாலும் அதை சரிசெய்யும். 

நாம் சாப்பிடும் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளால், கால்சியம் குறைபாடு மற்றும் நோய்கள் உடலில் ஏற்படுகிறது. இதனால் நாளடைவில் எலும்பு தேய்மானம், எலும்பு உறுதியின்மை ஏற்படுகிறது.

சிறிய வயதிலேயே கை-கால் வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படுவது போன்ற தொல்லைகளை கால்சியம் குறைபாடு ஏற்படுத்துகிறது. 

இவற்றையெல்லாம் சரிசெய்யக்கூடிய ஒரு குறிப்பு. இதை செய்ய 10 நிமிடங்கள் போதும். இதை ஒருமுறை செய்து வைத்துவிட்டால் ஒர வாரத்திற்கு பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

ஆளிவிதை (ஃப்ளாக்ஸ் சீட்) – 30 கிராம்

(இதில் அதிகப்படியான மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், தியாமின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளது. இது எலும்புக்கு உறுதியளிக்கிறது. மூட்டு வலியை சரிசெய்யும், செரிமான பிரச்னையை சரிசெய்யும். முக்கியமாக மெமோபாஸ் சமயங்களில் பெண்களுக்கு நல்லது)

எள் – 20 கிராம்

(கருப்பு அல்லது வெள்ளை எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

(கால்சிய சத்துக்கள் நிறைந்தது. ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூட்டுவலி உள்ளவர்களுக்கும் எள் நல்லது)

மஞ்சள் பூசணி விதைகள் (பம்கின் சீட்ஸ்) – 20 கிராம்

(அழற்சிக்கு எதிரானது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மூட்டு வலி மற்றும் தசைபிடிப்புகளுக்கு தீர்வு தருகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை பலப்படுத்துவதுடன், வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்யும்.

காய்ந்த திராட்சை – 10 கிராம்

கால்சியம் சத்து நிறைந்தது. முதுகுத்தண்டுவடம் வலுப்பெறவேண்டுமெனில் திராட்சைகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கலை சரிசெய்து, பல்லுக்கு உறுதியளிக்கும்.

தேன் – தேவையான அளவு

(மருத்துவ குணம் நிறைந்தது. வயிறு தொடர்பான பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்யக்கூடியது)

செய்முறை

இந்த மூன்று விதைகளையும் ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸில் இடித்து பொடித்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியை அதிகம் ஓடவிட்டால் எண்ணெய் பிரிந்து வரும். எனவே கொரகொர பொடியாக அடித்துக்கொள்ள வேண்டும். கடைசியாக அதில் திராட்சை சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு கண்ணாடி ஜாரில் சேர்த்து அது மூழ்கும் அளவு தேன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தப்பொடியை ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். வெளியே வைத்தும் பயன்படுத்தலாம். இதை ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்திற்கு மட்டும் செய்து அவ்வப்போது மட்டும் பயன்படுத்துங்கள். அப்போதுதான் ஃபிரஷ்ஷாக நன்றாக இருக்கும்.

இது ஒருவாரம் வரைதான் கெடாமல் இருக்கும். இதை காலை உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது. எலும்பை உறுதிப்படுத்தி, உடல் சோர்வை நீக்கும்.

ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைக்கு சிறந்த தீர்வு. இதை அனைவரும் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் கூட எடுக்கலாம். தேனை குறைத்தோ அல்லது தேன் இல்லாமல் வெறும் சூடான தண்ணீரில் சேர்த்து அப்படியே பருகலாம். முடி உதிர்வு பிரச்னை மற்றும் சரும பிரச்னைக்கும் தீர்வு கொடுக்கிறது.

ஒரு வாரம் சாப்பிட்டாலே நல்ல பலன் தரும். ஓரளவு பலன் கிடைத்தவுடன் வாரம் இருமுறை கூட எடுத்துக்கொள்ளலாம். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும் என்பதால், கண்டிப்பாக முயற்சித்து பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.