Arisimparupu Sadam : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல்! கோவை ஸ்பெஷல் அரிசீம் பருப்பு சாதம்! இதோ இப்படி செய்ங்க!
Arisimparupu Sadam : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல்! கோவை ஸ்பெஷல் அரிசீம் பருப்பு சாதம்! இதோ இப்படி செய்ங்க!

தேவையான பொருட்கள்
அரிச பருப்பு – ஒரு கப் (இரண்டும் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும்)
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வர மிளகாய் – 2
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு (முமுதாக)
தக்காளி – 1 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
தேங்காய்ப்பூ – கால் கப்
பொடித்த சீரகம் – ஒரு ஸ்பூன் (நுணுக்கியது)
பூண்டு – 8 பல் (இடித்தது)
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன், அதில் கடுகு சேர்த்து பொரியவிடவேண்டும்.
பின்னர் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய், சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து அது கொதித்தவுடன், அதில் ஒரு கப் ஊறவைத்த அரிசி பருப்பு சேர்த்து குக்கரை மூடிவைத்து, 2 விசில் விடவேண்டும்.
குக்கர் ரிலீஸ் ஆனவுடன் எடுத்தால், சுவையான கோலை ஸ்பெஷல் அரிசீப்பருப்பு சாதம் தயார்.
திறந்தவுடன், அதில் நுணுக்கிய சீரகம், நசுக்கிய பூண்டு மற்றும் தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவேண்டும்.
இதற்கு தொட்டுக்கொள்ள வேகவைத்த உருளைக்கிழங்கு வறுவல் அல்லது வெங்காயப் பச்சடியே போதுமானது. தயிருடன் கூட இதை சேர்த்து சாப்பிட முடியும்.
அரிசீம்பருப்பு சாதம்
தமிழர்கள் சாப்பாடு எனப்படும் சாதத்தை முக்கிய உணவாக சாப்பிடுபவர்கள். அரிசியை அதிகம் பயன்படுத்தி அவர்கள் அனைத்து உணவுகளையும் தயாரிக்கிறார்கள்.
ஒரு முழு சாப்பாடு என்பது சாதம், சாம்பார், ரசம், தயிர் அல்லது மோர், கூட்டு, பொரியல், அவியல், வறுவல், வடை, பாயாசம், அப்பளம் என இத்தனை விஷயங்கள் அடங்கியது.
அவர்களின் வெரைட்டி ரைஸ் வரிசையில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், பொடி சாதம், எள்ளு சாதம், கொள்ளு சாதம் என பல வகைகளில் செய்கிறார்கள். அவர்கள் அரிசியிலே பல்வேறு சாதங்களை செய்கிறார்கள். அதில் செய்யப்படும் பிரியாணிக்கு பெரும் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் உணவு வகை மாறுபடுகிறது. தமிழகம் பூகோள ரீதியில் சோழ மண்டலம், பாண்டியநாடு, கொங்கு நாடு, தொண்டை மண்டலம் என பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உணவுகளும் மாறுபடும்.
இதில் இந்த அரிசீம்பருப்பு சாதம் கொங்குமண்டலத்தின் ஸ்பெஷல் உணவாகும். இது அரிசியையும், பருப்பையும் பயன்படுத்தி செய்யப்படுவதாகும். இந்த உணவின் பெயர் அடிக்கடி சமூக வலைதளங்களிலும் விவாதத்துக்கு உள்ளாகும். இந்த கொங்கு மண்டல உணவை மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் இது மட்டுமல்ல, ஒப்புட்டு, கோலா உருண்டை என தேங்காய் அதிகம் கிடைக்கும் கொங்கு மண்டலத்தில் தேங்காய் வைத்து செய்யப்படும் உணவுகள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. இங்கு வெங்காயம் மற்றும் கடலையும் அதிகளவில் கிடைக்கிறது.
இது மட்டுமின்றி இந்த மண்டலத்தில் தேங்காய்ப்பால் வெல்லம், உளுந்தங்களி, கச்சாயம், கேழ்வரகு புட்டு, அரிச புட்டு, பணியாரம், பக்கோடா, தேங்காய் மிட்டாய், கடலை உருண்டை, எள்ளு உருண்டை, பொரி உருண்டை என மற்ற உணவுகளும் பெரும் புகழ் பெற்றவையாகும்.
இவர்கள் அசைவத்தில் மட்டன், சிக்கன், மீன், காடை ஆகியவற்றையும் சாப்பிடுகிறார்கள். இதில் அரிசீம்பருப்பு சாதம் இந்த கொங்கு மண்டலத்தின் தனித்துவம் வாய்ந்த உணவாகும். இங்கு எள் மற்றும் கடலை எண்ணெய் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

டாபிக்ஸ்