உங்கள் குழந்தைகள் மரியாதையின்றி நடந்துகொள்கிறார்களா? 10 எச்சரிக்கை அறிகுறிகள் இவைதான்!
குழந்தைகள் மரியாதையின்றி நடந்துகொள்ளும் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு உதவுங்கள்.
உங்கள் குழந்தைகள் மரியாதையின்றி நடந்துகொள்கிறார்கள் என்றால், அதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் சரியாக இல்லையா? அவர்கள் மரியாதையின்றி நடந்துகொள்கிறார்கள் என்றால் அது அவர்களின் பள்ளிக்கல்வியை பாதிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிரமத்தை ஏற்படுத்தும். குடும்பம் மற்றும் நட்புகளிடமும் உள்ள உறவை அது பாதிக்கும். எனவே உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தோன்றினால், நீங்கள் உடனே அவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை மாற்றவேண்டும். அது என்னவென்று பாருங்கள்.
விதிகளை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்
உங்கள் குழந்தைகள் விதைகளை புறக்கணித்தாலோ அல்லது அதை மதிக்கவில்லையென்றாலோ இது அவர்கள் உங்களை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மற்றவர்களிடமும் அவர்கள் மரியாதையின்றியே நடந்துகொள்கிறார்கள். அவர்கள் சில வழிகாட்டு நடைமுறைகளை கேட்க விரும்பவில்லை என்று பொருள் அல்லது அவர்கள் எல்லைகளை உடைக்க முயல்கிறார்கள். இந்தப் பழக்கம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்வில் இருந்து தோன்றுகிறது.
பின்னால் சென்று பேசுவார்கள்
அவர்கள் உங்களுக்கு பின்னால் சென்று உங்களைப் பற்றி குறை கூறுவது அல்லது உங்களுடன் எப்போதும் விவாதிப்பது, எல்லாம் அவர்கள் உங்களின் கொள்ளைகளை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, அவர்கள் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று கூறினால், அவர்கள் கிண்டல் செய்வார்கள். இது குழந்தைகள் சரியான முறையில் அவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டவில்லை என்பதை காட்டுகிறது.
அவர்கள் தங்களின் தவறுகளை ஏற்பதை தவிர்ப்பார்கள்
குழந்தைகள் அவர்களின் செயல்களுக்கு பொறுப்பு ஏற்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் ஒரு பொம்மையை உடைத்துவிட்டால், அதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்களின் குறைகளை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதற்கு வெட்கப்படலாம். ஏனெனில் அவர்கள் தண்டனைகளுக்காக பயப்படலாம். எனவே பெற்றோர் அவர்கள் தங்களின் குற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான பாதுகாப்பான சூழலை பெற்றோர் உருவாக்கவேண்டும்.
எப்போதும் அனைத்தையும் குறைகூறிக்கொண்டு இருப்பது
உங்கள் குழந்தைகள் தொடர்ந்து குறைகூறிக்கொண்டு இருந்தார்கள் என்றால், அனைத்துக்கும் சிணுங்கிக்கொண்டு இருந்தார்கள் என்றால், இது அவர்கள் குடும்பத்தை மதிக்கவில்லை என்பதை காட்டும். எடுத்துக்காட்டாக அவர்கள் தொடர்ந்து உங்களுக்கு விவாதத்தில் ஈடுபட்டால், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாவிட்டால், அது உங்கள் குழந்தைகள் புறக்கணிப்பை உணர்கிறார்கள் என்று பொருள். எனவே பெற்றோர், அவர்களின் தேவை குறித்து கவனம்செலுத்தவேண்டும்.
பணிவு இன்மை
பணிவு இல்லாத குழந்தைகள் தான் அவமரியாதையாக நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக பொது இடங்களில் கண்ணீர் விட்டு அழுகிறார்கள் அல்லது தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். உங்கள் குழந்தைகள் வெளிப்படையான நண்பர்கள் முன்னிலையில் உங்களை விமர்சித்தால், அவர்களின் வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்பை அவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று பொருள். எனவே பெற்றோர் அவர்கள் அதை புரிந்துகொள்ள வழிகாட்டவேண்டும்.
உங்களை வைத்து காமெடி செய்வது அல்லது உங்களைப்போல் நடித்துக்காட்டுவது
உங்கள் குழந்தைகள் உங்களைப்போல் பேசிக்காட்டினாலோ அல்லது உங்களின் செயல்கள் மற்றும் ஆர்வங்களை செய்து காட்டினாலோ அது அவர்கள் உங்களை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்கள் உங்களை நகைப்புக்கு உரியவர்களாக்கி, மற்ற பெற்றோர்கள் எப்படி அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று ஒப்பிட்டுக்கொண்டு இருந்தால், அவர்களின் இந்த நடவடிக்கை பாதுகாப்பின்மை உணர்வில் இருந்து வருகிறது. எனவே மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளும் எண்ணத்தில் இருந்து தோன்றுகிறது என்பதை உணருங்கள். எனவே பெற்றோர்கள், ஒவ்வொருவரும் எப்படி ஒரு தனிப்பட்ட நபர் என்பதை சுட்டிக்காட்டுங்கள். அவர்களால் முடிந்த அளவுதான் செய்யவேண்டும் என்று கூறுங்கள்.
உடல் ரீதியான தாக்குதல்
உடல் ரீதியான தாக்குதல் என்பது, அவர்களை விவாதங்களின்போது, அடிப்பதில் இருந்து ஏற்படுகிறது. உங்கள் குழந்தைகள் அவர்கள் விரக்தியடையும்போது வன்முறையை கையில் எடுத்தால், அது அவர்களுக்கு உணர்வு ரீதியான பிரச்னைகள் உள்ளது என்று பொருள். அவர்களுக்கு விரக்தி, பயம் மற்றும் பதற்றம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்னையில் உடனே தலையிட்டு, அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களின் உணர்வுகளை நன்முறையில் வெளிப்படுத்த உதவவேண்டும்.
அவமதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்
குழந்தைகள், ஆசிரியர்கள் அல்லது மற்ற அதிகாரமிக்கவர்களை அவமதிப்பது அவமரியாதையை அவர்கள் காட்டுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அவர்கள் வகுப்பில் ஆசிரியர்களின் கட்டளைகளை மதிக்காவிட்டால், அது அவர்கள் தொடர்ந்து விரக்தியை சந்தித்து வருகிறார்கள் என்று பொருள். அவர்கள் இடையூறுகளுக்கும், சுதந்திரமின்மைக்கும் காரணமாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எனவே ஆசிரியர்கள் எப்போதும் குழந்தைகளின் நலனை கருத்தில்கொள்ளவேண்டும் என்று பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் வம்பு
உங்கள் குழந்தைகள் சகோதரர்கள் அல்லது சகோதரிகளுடன் எப்போது விளையாடாமல் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால், அது குழந்தைக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே குழந்தைகளை பெற்றோர் ஒன்றிணைந்து விளையாட அறிவுறுத்தவேண்டும். அவர்களுக்கு எல்லைகளை வகுக்கவேண்டும்.
தவறாக எண்ணுவது, மற்றவர்களை கேலி செய்வது
உங்கள் குழந்தைகள் அடிக்கடி அவர்களின் நண்பர்கள், வீட்டில் உதவி செய்யும் நபர்கள், உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் என அனைவரையும் அவமதித்தால் அல்லது அவர்களிடன் கனிவாக நடந்துகொள்ளாமல் முரடாக கட்டளையிட்டால், அவர்கள் இதுபோல் பிறர் யாரையோ நடத்துவதை பாரத்துள்ளார்கள் என்று பொருள். எனவே பெற்றோர் சில கலந்துரையாடல்களில் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்வது எப்படி என்றும், அனைவருடனும் மரியாதையுடன் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அறிவுறுத்தவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்