தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Are You Wondering What To Do To Get Rid Of Acne That Destroys Beauty Try This Immediately.. Be Amazed

Skin Care: அழகை சிதைக்கும் முகப்பருவை போக்க என்ன செய்வது என யோசிப்பவரா நீங்கள்.. உடனே இத ட்ரை பாருங்க.. அசந்துடுவீங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 12, 2024 02:15 PM IST

Beauty Tips: முகப்பருவை மறைக்க நாம் பல முயற்சிகளை செய்து மேக்கப்போடலாம். ஆனால் எவ்வளவு அழகாக அலங்கரித்தாலும் பார்ப்பவரின் கண் முதலில் அந்தப் பரு மீதுதான் செல்லும். ஆனால் இந்த பருக்களை போக்க சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். இவை சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். முகப்பருவும் நீங்கி விடும்.

அழகை சிதைக்கும் முகப்பருவை போக்க என்ன செய்வது என யோசிப்பவரா நீங்கள்..
அழகை சிதைக்கும் முகப்பருவை போக்க என்ன செய்வது என யோசிப்பவரா நீங்கள்.. (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

கிரீன் டீ மற்றும் தேன் ஸ்க்ரப் முகப்பருவை எதிர்த்துப் போராடுகிறது

க்ரீன் டீ மற்றும் தேன் சேர்த்து செய்யப்பட்ட ஸ்க்ரப் முகப்பருவை எதிர்த்துப் போராட ஒரு நல்ல வழி. க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. மேலும் இவை சருமத்தை எந்த விதத்திலும் சேதமடையாமல் பாதுகாக்கிறது. கிரீன் டீயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முகப்பருவை உருவாக்கும் புரோபியோனிபாக்டீரியாவை அழிக்க உதவுகிறது.

கிரீன் டீயுடன் தேனில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அழகான சருமத்தைப் பெற உதவுகிறது. இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. எனவே கிரீன் டீ மற்றும் தேன் கலவையானது முகப்பருவுக்கு எதிராக எவ்வாறு திறம்பட செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்

1. முகப்பருவுக்கு தீர்வு: 

ஹார்மோன்களில் ஏற்ற இறக்கம், மன அழுத்தம், தவறான உணவு, மாசு. முகத்தின் தூய்மையை பராமரிக்காததும் முகப்பருவை ஏற்படுத்துகிறது. இவை முகத்தில் உள்ள நுண்துளைகளை அடைத்து முகத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால் கிரீன் டீ மற்றும் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும்.

2. சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது: 

எக்ஸ் பேலியேட் என்பது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்வது ஆகும். கிரீன் டீ சருமத்தை உரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் முகப்பருவால் முகத்தில் உள்ள சிவப்பு புள்ளிகளை போக்கும். கிரீன் டீ தூளை தேனுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால் முகத்திற்கு அதிக பொலிவு கிடைக்கும்.

3. டோனராக செயல்படுகிறது : 

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சரும டோனராக செயல்படுகிறது. தோலில் உள்ள கிருமிகளுக்கு எதிராக டோனர்கள் போராடுகின்றன. இதனால் சருமம் மிருதுவாகும். இதனுடன், கிரீன் டீ தூள் புற ஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பைப் போக்கவும் செயல்படுகிறது.

4. தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது : 

தோல் சுருக்கமாக மாறுவதால், வயதாகிவிட்டதாக தெரிகிறது. ஆனால் கிரீன் டீ மற்றும் தேன் ஸ்க்ரப் உங்கள் சருமத்தை மென்மையாக்குவதன் மூலம் சுருக்கங்களைக் குறைக்கும். இவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது.

வீட்டில் கிரீன் டீ தூள் மற்றும் தேன் கொண்டு ஸ்கரப் செய்வது எப்படி?

கிரீன் டீ மற்றும் தேன் ஸ்க்ரப் வீட்டில் செய்வது மிகவும் எளிது. இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. நீங்கள் தினமும் பயன்படுத்தும் பச்சை தேயிலை தூளை எடுத்துக் கொள்ளுங்கள். க்ரீன் டீ இலைகளுடன் தேனை கலக்கவும். வேண்டுமானால் இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் சமமாக கலந்து ஒரு ஸ்க்ரப்பில் கொண்டு வாருங்கள்.

ஸ்க்ரப் தயாரித்த பிறகு, வட்ட இயக்கத்தில் முகத்தில் மசாஜ் செய்யவும். மிகவும் கடினமாக தேய்க்க வேண்டாம். நீங்கள் எண்ணெய் பசையை உணரும் இடங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இதற்குப் பிறகு, முகத்தில் டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்