வயிறு குலுங்க சிரிங்க! இதோ உங்கள் தொல்லை மறக்க வைக்கும் கடி ஜோக்குகள்! காண்டு ஆகமா படிங்க!
வாய்விட்டு சிரிக்கவும் உதவும் சில கடிஜோக்குகளை நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம். இந்த கடிஜோக்குகள் உங்களை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சற்று காண்டு ஏற்றவும் செய்யலாம். இந்த கடிஜோக்குகளை படித்து சிரித்து மகிழ்ந்து உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்.
ஒவ்வொரு நாளும் உலக மாறிக்கொண்டே இருக்கிறது. மனிதனின் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பிரச்சனைகளின் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த குடும்ப பிரச்சினை மற்றும் அலுவலக பிரச்சனைகளில் இருந்து உங்களை நிதானமாக வைத்திருக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் உதவும் சில கடிஜோக்குகளை நாங்கள் இங்கே கொண்டு வந்துள்ளோம். இந்த கடிஜோக்குகள் உங்களை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சற்று காண்டு ஏற்றவும் செய்யலாம். இந்த கடிஜோக்குகளை படித்து சிரித்து மகிழ்ந்து உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நண்பன் 1: நீ வாழைப்பழம் திருடுறத உங்க அப்பா பார்த்துட்டாரு! அப்புறம் என்ன செஞ்சாரு?
நண்பன் 2: வேற என்ன வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தோலை உரிச்சிட்டாரு!
நண்பன் 1: வெண்ண வியாபாரி லெட்டர் எப்படி எழுதுவாரு?
நண்பன் 2: வேற எப்படி உருகி உருகி தான் எழுதுவாரு
இட்லி கடைக்காரர்: தம்பி தீக்குச்சியை பத்த வெச்சு ஏன் இட்லி மேல வைச்சு பார்க்கிற?
வாடிக்கையாளர்: நீங்க தானே இட்லி "பஞ்சு" மாதிரி இருக்குன்னு சொன்னீங்க! அதான் தீப்பிடிக்குதானு பார்த்தேன்!
டாக்டர் : நாய் எந்த இடத்தில் கடித்தது?
நோயாளி: பெருமாள் கோவில் சந்துல.
தோழி 1: வீட்டு சாவி தொலஞ்சி போனா யார்கிட்ட கேக்கணும்?
தோழி 2 : “கீ" தா” கிட்ட தா கேக்கணும்.
வாத்தியார்: ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும் வரையாமல் வச்சி இருக்க?
மாணவன்: அது வாயில்லா பிராணி சார்.
நண்பன் 1: பன்னுல தண்ணீர் போட்டா என்னாகும்?
நண்பன் 2: “பன்னீர்” ஆகும்.
நண்பன் 1: ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்?
நண்பன் 2: ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம்.
வாத்தியார்: எந்த Watch கரெக்டா Time காட்டும்?
மாணவன்: எந்த Watch-ம் காட்டாது நாம தா பாத்துக்கணும்.
வாத்தியார்: கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்.
வாத்தியார்: எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு வார்த்தை சொல்லுங்க?
மாணவன்: போஸ்ட் பாக்ஸ் .
கேள்வி: ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?
விடை: வெள்ளிக்கிழமை.
கேள்வி: ஒரு டாக்டர் நோயாளி கிட்ட உங்க கிட்னி பெயில் ஆகிடிச்சினு சொன்னாராம்.. அதுக்கு அந்தநோயாளி என்ன சொல்லிருப்பாரு?
விடை: நான் என்னோட கிட்னிய படிக்க வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி டாக்டர் அது பெயில் ஆகும்.
இது போன்ற ஜோக்குகளை தினமும் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து சிரித்திடுங்கள். வீட்டின் மகிழ்ச்சி பெருக பிரச்சனைகளை சிறிது நேரம் தள்ளி வைத்து விட்டு இது போன்ற மகிழ்ச்சி அளிக்க கூடிய செயல்களில் ஈடுபடுங்கள். இது உங்களின் மனதை அமைதியாக்கும். வாய்விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்ற தமிழ் பழமொழிக்கேற்ப வாழ்ந்திடுங்கள். இந்த ஜோக்குகள் உங்களுக்கு கவலையை மறந்து மகிழ்ச்சியோடு வாழ உதவும்.
டாபிக்ஸ்