லீவு விட்டாசா? கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மோர் ஃபன் என மாற்ற இந்த 10 ஆக்டிவிட்டிகளை செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  லீவு விட்டாசா? கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மோர் ஃபன் என மாற்ற இந்த 10 ஆக்டிவிட்டிகளை செய்யலாம்!

லீவு விட்டாசா? கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மோர் ஃபன் என மாற்ற இந்த 10 ஆக்டிவிட்டிகளை செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Dec 24, 2024 09:40 AM IST

கிறிஸ்துமஸ் லீவில் உங்கள் குழந்தைகள் செய்யவேண்டிய ஆக்டிவிட்டிகள் என்ன?

லீவு விட்டாசா? கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மோர் ஃபன் என மாற்ற இந்த 10 ஆக்டிவிட்டிகளை செய்யலாம்!
லீவு விட்டாசா? கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், மோர் ஃபன் என மாற்ற இந்த 10 ஆக்டிவிட்டிகளை செய்யலாம்!

கிரீட்டிங் கார்டுகள் செய்வது

கிறிஸ்துமஸ்க்கு தேவையான வாழ்த்து அட்டைகளை குழந்தைகளை தயார் செய்ய அனுமதியுங்கள். அதை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள். கலர் பேப்பர்கள், ஸ்டிக்கர்கள், கிளிட்டர்கள் என உபயோகித்து, வித்யாசமான, தனித்துவமான டிசைன்களை உருவாக்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் கிரியேட்டிவிட்யை மேம்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும். இது கிறிஸ்துமஸ் காலத்தில் நடப்பதால், கொண்டாட்டமாகவும் இருக்கும். கிறிஸ்துமஸ் மரம் போன்ற கிரீட்டிங் கார்டுகளை உருவாக்கலாம். சாண்டாவின் தொப்பி, ஸ்னோ மேன் போன்ற கார்டுகள் உங்களின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கும்.

கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது

உங்கள் வீட்டின் ஹாலை குளிர்கால வொண்டர் லாண்டாக மாற்றலாம். அங்கு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அதில் அலங்காரங்கள் செய்யலாம். அதில் பளபளக்கும் பொருட்களை தொங்கவிடலாம். விளக்குகளை ஒளிர விடலாம். கைவினைப் பொருட்களை தொங்கவிடலாம். உங்கள் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த அலங்காரங்களை செய்ய வையுங்கள். அவர்கள் தாங்கள் அலங்கரித்த ஒன்றைப் பார்க்கும்போது, அது அவர்களுக்கு எத்தனை உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தரும் என்று பாருங்கள்.

விளையாட்டு இரவு

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விளையாட்டு இரவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். விளையாட்டுக்களை விளையாடுங்கள். விடுமுறை கருப்பொருள் கொண்ட விளையாட்டுக்களை விளையாடுங்கள். நீங்கள் அதிக குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு நீங்கள் போடிகள் கூட நடத்தி பரிசுகள் கொடுக்கலாம். வார்த்தை விளையாட்டுகள், பாடல்கள், சைகை விளையாட்டுகள், நடனங்கள் என மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்.

சுவையான விருந்து சமைக்க உதவுங்கள்

உங்கள் குழந்தைகளை சமையல் வேலைகளில் ஈடுபடுத்துங்கள். அவர்களை கிறிஸ்துமஸ் கேக்குகளை செய்ய அனுமதியுங்கள். அவர்களை குக்கிகள், பிரட்கள், சாக்லேட்கள் என அனைத்தையும் செய்து கொடுக்க அறிவுறுத்துங்கள். அவர்கள் சமைத்த வித்யாசமான உணவுகளையும் அவர்கள் அலங்கரிக்கட்டும். இதனால் குழந்தைகள் பல இனிப்பான நினைவுகளை உருவாக்குவார்கள். இது அவர்களுக்கு போர் அடிக்காமல் இருக்கவும், உழைப்பின் அருமையை உணர்த்தவும் உதவும். எனவே அவர்களுக்கு இந்த விடுமுறையில் சமையல் கற்றுக்கொடுக்கலாம். இது கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்குத்தான் சாத்தியம்.

கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் பார்க்கலாம்

விளையாட்டுகள் அதிகம் நிறைந்த கிறிஸ்துமஸ் படங்களைப் பார்த்து மகிழலாம். அவர்களுக்கு சில படங்கள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். தி கிறிஸ்துமஸ் க்ரானிக்கல்ஸ், ஹோம் அலோன் ஆகிய படங்களைப் பார்த்து, குடும்பத்தினரிடையே ஒரு பிணைப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். அவர்களுக்கு வீட்டில் பார்த்தாலும் தியேட்டர் எஃபக்டை கொடுக்க பாப்கார்ன், ஹாட் சாக்லேட் என செய்து கொடுங்கள். இதனால் அவர்களுக்கு முழுமையான திரை அனுபவம் கிடைக்கும். இந்த பண்டிகை கால கொண்டாட்டத்தை அவர்கள் கொண்டாடி மகிழட்டும்.

கேரல் பாடல்களை கற்றுக்கொண்டு பாடுங்கள்

விடுமுறை நாட்கள் கொண்டாட்டத்தில் திளைக்கவேண்டும் என்றால், அவர்கள் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களை கற்கவேண்டும். அதை பாடவும் வேண்டும். அவர்களுக்காக எண்ணற்ற பாடல்கள் உள்ளன. பிரபலமான ஜிங்கில் பெல்ஸ், வி விஷ் யூ ய மெரி கிறிஸ்துமஸ், சைலன்ட் நைட் ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றை வீட்டிலேயே சிறிய கான்சர்ட்களாக உருவாக்கலாம்.

சீக்ரட் சான்டா

சீக்ரட் சான்டாவை நீங்கள் கொண்டாடுங்கள். குழந்தைகளின் நண்பர்களுடன் சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடுங்கள். குழந்தைகளுக்கு இது மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். பெயர்களை எழுதிப்போட்டு, அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும். கடைசி வரை அவர்களுக்கு டாஸ்குகள் கொடுக்கட்டும். அவர்களுக்கு ஒரு பட்ஜெட்டை அறிவித்து, அதில் அவர்கள் ரிவீலிங் நாளில் பரிசுப்பொருட்கள் வாங்கி கொடுக்கட்டும். அப்போது அவர்கள் தங்களின் ரகசிய நண்பன் யார் என்று குழம்புவார்கள். இதில் அவர்களுக்கு மகிழ்ச்சியும், திரில்லிங்கும் இருக்கும்.

சாண்டா போல் உடை

உங்கள் விடுமுறை நாட்களில் நீங்கள் மாயாஜாலத்தை உருவாக்கவேண்டுமா? எனில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சாண்டாபோல் உடை அணிந்து விடுங்கள். சாண்டா உங்கள் வீட்டுக்கு வருவதைப்போன்ற தோற்றத்தையும், அவர்களுக்கு சாண்டாக்கள் பரிசு கொண்டு வருவதைப்போலவும் ஏற்பாடு செய்யுங்கள். அவர்களுக்கு இது ஆச்சர்யத்தைக் கொடுக்கும். அவர்களின் கண்கள் மகிழ்ச்சியில் துள்ளும். அவர்கள் சாண்டாவை சந்திக்கும்போது மகிழ்வார்கள். அவர்களுக்கு இது நல்ல நினைவுகளை உருவாக்கும். இதை காலத்துக்கும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தேவையுள்ளவர்களுக்கு உதவுவது

உங்கள் குழந்தைகளுக்கு தேவையுள்ளவர்களுக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை எடுத்துக்கூறுங்கள். அவர்களுக்கு ஆடைகள், பள்ளிக்கு தேவையான பொருட்கள் மற்றும் விளையாட்டு சாமான்கள் என பகிர்தல் எத்தனை ஆனந்தமானது என்பதை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு பொருட்களைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு கொடுக்கும் விஷயத்தில் ஈடுபடுத்துங்கள். அது அவர்களுக்கு எத்தனை உதவிகரமானது என்பதை எடுத்துக்கூறுங்கள். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அன்பு மற்றும் கருணையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரியவையுங்கள்.

பனிக்கால சுற்றுலா

பனிக்காலத்தில் சுற்றி பார்க்கவேண்டிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். உங்களுக்கு அது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி செல்ல முடியாவிட்டாலும் கவலையே வேண்டாம். வீட்டிலே ஸ்னோமேனை உருவாக்கலாம். ஸ்னோ சண்டைகள் போடலாம். அவர்களுக்கு பனியுடன் விளையாட முன்னெச்சரிக்கையுடன் சில வாய்ப்புக்களைக் கொடுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.