Weight Loss Tips: தொப்பையால் அவதிப்படுபவர்களா நீங்கள்.. இந்த 6 பானம் இருக்க கவலை ஏன்?
Weight Loss: உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க முடியாது என்பது நிச்சயம் உண்மை. ஆனால் சமச்சீர் உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு சில வீட்டில் பானங்களைச் சேர்ப்பது ஒட்டுமொத்த எடையைக் குறைக்க உதவும்.

பொதுவாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழல் இருப்பது இன்று பலருக்கும் தொப்பை பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் சிலருக்கு தொப்பை குறையாமல் சிரம படுகின்றனர். சிலருக்கு ஜிம், வாக்கிங் என உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் தொப்பையை எப்படிக் குறைப்பது என்று நீங்கள் கவலைப்பட்டால், இதோ அதற்கான சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க முடியாது என்பது நிச்சயம் உண்மை. ஆனால் சமச்சீர் உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு சில வீட்டில் பானங்களைச் சேர்ப்பது ஒட்டுமொத்த எடையைக் குறைக்க உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் வீட்டில் தயாரிக்கும் இந்த பானங்கள் கிட்டத்தட்ட அனைத்து வயிற்று கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. இது கொழுப்பை கரைக்க உதவுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குமாரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் உடல் எடையை குறைக்கவும், தொப்பையை கரைக்கவும் உதவும் 6 பானங்கள் பற்றி எழுதியுள்ளார். அத்தகைய பானங்கள் பற்றிய தகவல்கள் இங்கே.
இஞ்சி தேநீர்
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்ட கலவைகள் உள்ளன. இது கலோரிகளை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்த இஞ்சி அவசியம். இதன் காரணமாக, தொப்பையை குறைக்கிறது என்று ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் திலீப் கூடே.தெரிவித்துள்ளார்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை பல செரிமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் அதை மிதமாக உட்கொள்வது முக்கியம் என்று ஷிகா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
வெள்ளரி புதினா தண்ணீர்
வெள்ளரி, புதினா கலந்த தண்ணீரை சர்க்கரை சேர்க்காமல் உட்கொள்ள வேண்டும். இது உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமின்றி புத்துணர்ச்சியையும் தருகிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும். அதனால் அடிக்கடி பசி எடுக்காது. மேலும், மனதுக்கு பிடித்ததை சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் வராது.
ஆப்பிள் சைடர் வினிகர் பானம்
ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த தண்ணீரை உணவுக்கு முன் உட்கொள்ள வேண்டும். இது கொழுப்பை குறைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்தவும் இது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
இலவங்கப்பட்டை தேநீர்
ஷிகாவின் கூற்றுப்படி, இலவங்கப்பட்டை தேநீர் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். பசியைக் கட்டுப்படுத்தவும் இது நல்லது.
சோம்பு விதை
சோம்பு விதையில் இருந்து தேநீர் தயாரித்து குடித்தால் செரிமானம் மேம்படும்.
கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது. குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற எலுமிச்சை செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பானங்கள் நன்மை பயக்கும் என்றாலும், சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் முக்கியம். கூடே கூறுகிறார். ஆனால் உங்கள் உணவில் எந்த வித மாற்றத்தையும் செய்வதற்கு முன் ஒரு நிபுணரின் கருத்தைப் பெற்ற பின் முயற்சிப்பது நல்லது.

டாபிக்ஸ்