படித்தவற்றை நினைவில் வைக்க முடியாமல் அவதியா? இந்த 10 பழக்கங்கள் உதவும்! முயற்சித்து பாருங்களேன்!
படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் எளிய வழிகளை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தைகள் கஷ்டப்பட்டு படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் அவதிப்படுகிறார்களா? ஆனால், அவர்களுக்கு நினைவில் வைத்துக்கொள்ள இந்த வழிகளைப் பின்பற்றுங்கள். அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கான சிறந்த படிக்கும் பழக்கங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டால், அதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வதில் ஆச்சர்யங்களைக் கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கு சில பழக்கங்கள் உதவும். அது என்னவென்று பாருங்கள். உங்கள் குழந்தைகள் தாங்கள் படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவார்கள். இதனால் அவர்களால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
அவர்களுக்கு தொடர்ச்சியான படிப்பு அட்டவணை
அவர்களுக்கு தொடர்ச்சியான படிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டால், அது அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும். அவர்களுக்கு தேர்வு நேரங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும். அவர்களுக்கு படிப்பதில் ஒரு தொடர்ச்சி இருக்கும். இதனால் அவர்கள் அவ்வப்போது படித்து முடித்து, ரிலாக்ஸாக தேர்வை எதிர்கொள்வார்கள்.
படிக்கும் நேரத்துக்கு இடையில் இடைவெளி
படிக்கும் பாடங்களை சிறு பகுதிகளாக பிரித்து கொள்ளுங்கள். இதனால் நீக்ஙள் அதிகம் படிக்கவேண்டும் என்ற சுமையான எண்ணத்தில் இருந்து விடுபட முடியும். படிக்க முடிந்த அளவு மட்டும் படித்துக்கொள்ளுங்கள். தெளிவாக கவனம் செலுத்தி படியுங்கள். எவ்வித அழுத்தமும் இல்லாமல் பொறுமையாகவும், நல்ல முறையிலும் படியுங்கள்.
படித்தவற்றி மீண்டும் நினைவு கூறுவது
உங்கள் குழந்தைகள் அண்மையில் படித்தவற்றை மீண்டும் நினைவு கூறுவதற்கு ஊக்கம் கொடுங்கள். அவர்களே கேள்விகள் கேட்டு பதில்கள் கூறிக்கொள்ள உற்சாகப்படுத்துங்கள். அவர்களை புரிந்துகொண்டு படிக்க அறிவுறத்துங்கள். இதனால் அவர்களுக்கு நீண்ட காலம் நினைவில் இருக்கும். மேலும் இது அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் அறிவை அதிகரிக்கும்.
விசுவலாக படிப்பது
அவர்கள் படிப்பது வெறும் தியரியாக மட்டும் இருக்கக்கூடாது. அவர்கள் டையகிராம்கள், சார்ட்கள் மற்றும் மைண்ட் மேப்கள் என அவர்களுக்கு நீங்கள் சில சிக்கலான பாடங்களை எளிமையாக உணர்த்தும் வழிகளை கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு நீங்கள் விசுவலாகக் காட்டும்போது அவர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.
இடைவெளி எடுக்க கற்றுக்கொடுங்கள்
படிக்கும்போது, அவர்கள் சிறு இடைவெளிகளை எடுக்கக் கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் மூளைக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். அவர்களுக்கு புதிய தகவல்களை மூளை தக்கவைத்துக்கொள்ள உதவும். ஒட்டுமொத்த கவனிக்கும் திறனை அதிகரிக்கும். அவர்களின் கற்றல் ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் சிறந்த முறையில் தங்களை மேம்படுத்திக்கொள்வார்கள்.
குறிப்புகள்
உங்கள் குழந்தைகள் படிக்கும்போது அவர்கள் குறிப்புக்களை எடுத்து படிக்க அறிவுறுத்துங்கள். அவர்கள் பல சிக்கலான கான்செப்ட்களை கற்பதில் அவர்களுக்கு கட்டாயம் சிரமம் இருக்கும். எனவே அவர்களுக்கு சிறு குறிப்புகளை எடுத்து படிக்க வைக்கும்போது, அவர்களுக்கு அது எளிதாக நினைவில் இருக்கும். இது அவர்களின் ஒட்டுமொத்த கற்றல் திறனை அதிகரிக்கும். முக்கிய தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.
கதைகள் கூறுவது
உங்கள் குழந்தைகளின் பாடங்களை சுவாரஸ்யமான கதைகளாக மாற்றுங்கள். இது அவர்களின் கற்றல் திறனை மேலும் அதிகரிக்கும். இதனால் அவர்கள் படிக்கும் பாடங்களில் அதிகளவில் கவனம் செலுத்துவார்கள். அதை நீண்ட காலமும் நினைவில் வைத்திருப்பார்கள்.
போதிய உறக்கம்
உங்கள் குழந்தைகளுக்கு போதியளவு உறக்கம் வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாங்கள் படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இதனால் அவர்களால் கவனம் செலுத்தவும் முடியும். இது அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். அவர்கள் படித்தவற்றை எளிதில் நினைவுகூறவும் உதவும்.
பல்வேறு வழிகளையும் படிக்க பயன்படுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் படிக்க, எழுத மற்றும் பேச என நீங்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்தவேண்டும். அவர்கள் நன்றாக படிக்கிறார்களா என கவனிக்கவேண்டும். இதுதான் அவர்களின் மூளையைத் தூண்டும். உங்கள் குழந்தைகளை பல்வேறு ஆக்டிவிட்டிகளிலும் ஈடுபடுத்துங்கள். இதனால் அவர்கள் சில விஷயங்களை நன்றாக புரிந்துகொள்வார்கள். அவர்கள் தெளிவாக தாங்கள் படித்த அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
படித்தவற்றை நினைவுகூறுவது
நீங்கள் நேற்று படித்தவற்றை இன்றும், இன்று படித்தவற்றை நாளை என மீண்டும் நினைவுகூறவேண்டும். இது நீங்கள் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கிறது. இது உங்களின் முக்கியமான கான்செப்ட்களை புரிந்துகொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதனால் நீங்கள் படித்தவை நீண்ட காலம் நினைவில் இருக்கிறது. இது உங்களுக்கு தகவல்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்