தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Are You Someone Who Spends Long Hours Sitting In The Office And What To Do If You Have Back Pain

Back Pain: ஆபிஸில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றும் நபரா நீங்கள்? - முதுகு வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

Marimuthu M HT Tamil
Jan 04, 2024 02:06 PM IST

ஆபிஸில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றும் நபர்கள் முதுகுவலிக்கு செய்யவேண்டியவை குறித்துக் காணலாம்.

முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிமுறைகள்
முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிமுறைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

முதுகு வலிக்கான உடற்பயிற்சிகள்:

 • முதுகுவலியை அனுபவிப்பவர்கள், பணிக்கு இடையே அரைமணி நேரமாவது முதுகுக்கு ஓய்வுகொடுப்பது முக்கியம்.
 • முதுகுவலியை அனுபவிப்பவர்கள், 1 மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்கவேண்டும். 
 • ஏரோபிக்ஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு முதுகு வலியையும் குறைக்க உதவுகிறது. தவிர, சூரிய நமஸ்காரம் செய்வது முதுகுவலியைப் போக்க உதவுகிறது.

முதுகுவலியைப் போக்கும் வீட்டு வைத்தியம்:

 • இஞ்சி தேநீர்: இஞ்சியை சிறு துண்டுகளாக்கி 15 நிமிடங்கள் நீரில் கொதிக்கவைத்து பருகவும். இஞ்சி முதுகுவலியைப் போக்கும் தன்மை கொண்டது.
 • மஞ்சள் பால்: மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பொடியாக்கி, பாலினை சுண்டக் காய்ச்சி குடித்து வர முதுகுவலிக்கு நிவாரணமாக இருக்கும்.
 •  மிளகுக்கீரை எண்ணெய் மசாஜ்: தேங்காய் எண்ணெயுடன் மிளகுக்கீரை எண்ணெய்யை கலக்கி சூடுபடுத்தி வெதுவெதுப்பான சூட்டில் முதுகில் தடவி மசாஜ் செய்யவேண்டும்.
 •  பூண்டு எண்ணெய்: பூண்டினை பொடியாக்கி உண்டாக்கிய எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம். மேலும் பூண்டினை வெறுமென மென்று தின்று முழுங்கினால் முதுகுவலிக்குப் பிரச்னை தீரும்.
 •  துளசி இலை தேநீர்: ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து சூடாக ஒருவாரம்பருகி வர முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
 • யூகலிப்டஸ் எண்ணெய்: யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி முதுகில் தேய்த்துவர வலி குறையும்.
 • பழங்கள்: பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்கள்,இளநீர், கீரைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள நரம்பு ரீதியிலான பிரச்னை தீரும்.
 •  ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்ள முதுகுவலிக்கு நிவாரணமாக இருக்கும்.
 •  வைட்டமின் சி நிறைந்த ஆஞ்ரசு, நெல்லிக்காய், ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள முதுகு எலும்புகள் பலமாகும்.
 •  தினமும் எட்டு டம்ளர் நீர் குடித்து வர, உடலில் நீரிழப்பு நீங்கி முதுகுவலி சரியாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்