தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Are You Parenting Your Partner Here Are The Signs To Watch Out For Relationship

Relationship: கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் ரிலேஷன்ஷிப்பில் விரிசல் வரலாம்!

Marimuthu M HT Tamil
Jan 19, 2024 12:13 PM IST

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் ரிலேஷன்ஷிப்பில் விரிசல் வரலாம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் ரிலேஷன்ஷிப்பில் விரிசல் வரலாம்!
கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் ரிலேஷன்ஷிப்பில் விரிசல் வரலாம்! (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

இளமைப் பருவத்தில் நாம் ஒரு காதல் உறவில் இருக்கும்போது, நமது துணையுடன் பழகும்போது நமது பெற்றோர் போன்ற நடவடிக்கைகளால், அவரது தவறை அதிகம் பார்க்கிறோம்.

அதற்கான அறிகுறிகள்:

  • இக்கால கட்டத்தில் இல்லறத்துணையுடனோ அல்லது வருங்காலத் துணையுடனோ சந்தேகத்துடன் பழகிவருவீர்கள் 
  • உங்கள் இல்லறத்துணை உங்களை நேசிப்பதை உணராமல் இருப்பீர்கள். 
  • உங்களது ரிலேஷன்ஷிப்பில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. தேக்கம் அடைந்து இருப்பீர்கள். 
  • இப்படி உணரத் தொடங்கினால், அதனை மாற்ற முயற்சிகளை எடுக்கலாம் என உளவியல் நிபுணர் மர்லேனா டில்ஹோன் தெரிவித்துள்ளார். 

நமது இல்லறத்துணையின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் நாம் செய்துவிட்டு இறுதியில் அதனை அவர்களுக்கு நாம் நினைவூட்டுகிறோம். இது அவர்களது பணிகுறித்த செயல்பாடுகளை, அவர்களை செய்யவிடாமல் தடுக்கிறது. இதனால், எதிர்தரப்பினர் சோம்பேறியாக பொறுப்பில்லாமல் ஆகின்றனர்.  

தனி நபரின் நிதியைக் கையாள அனுமதியுங்கள்: நாம் நம் இல்லறத்துணையின் பில்களை செலுத்துகிறோம். அவர்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கையாள்கிறோம். விஷயங்களைக் கையாள அவர்களுக்கு நிதி முதிர்ச்சி இல்லை நம்புகிறோம். இந்த எண்ண ஓட்டம் தவறு. அதை மாற்றி, அவர்களது பணியை அவரே செய்யவைக்கவேண்டும். பொறுத்துக்கொள்ளுங்கள்: இல்லறத்துணை செய்யும் பிடிக்காத விஷயங்களை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். 

மனநிலை நிர்வாகம்: உறவில் உள்ள குழந்தையாக இல்லறத்துணையை நினைத்து, எல்லா நேரங்களிலும் அவர்களின் மனநிலையை நிர்வகிக்க முயற்சிக்கிறோம்.  அதை மிக நாசூக்காக கையாள்கிறோம். அது தவறு. 

பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும்: நம்முடைய தேவைகளையும் எண்ணங்களையும் இல்லறத்துணையிடமோ அல்லது காதல் துணையிடமோ அதிகமாக பகிர நினைக்கிறோம். அப்படியொரு சூழ்நிலையில், நம்முடைய உணர்ச்சிகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். இல்லறத்துணை, நம் பேச்சினைக் கேட்டு நடக்க வேண்டும் என நினைக்கக் கூடாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்