உங்கள் உடலின் வளர்சிதையை தீயா வேலை செய்ய வெக்கணுமா குமாரு? இதோ இந்த 10 உணவுகள் போதும்!
உடலின் வளர்சிதையை அதிகரிக்கும் உணவுகள் இவைதான்.
உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். ஏனெனில் நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பருகும் பானங்களை ஆற்றலாக மாற்றுவதுதான் உடலின் வளர்சிதை மாற்றம் ஆகும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயன்று, உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்க விரும்பினால், அதற்கு நீங்கள் சில உணவுப்பழக்கங்களை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். இது பலரின் கனவாகவும் உள்ளது. எனவே உங்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிக்கும் இந்த 10 உணவுகளை சாப்பிட்டால் அது உங்களின் உடல் எடை மேலாண்மை மற்றும் ஆரோக்கியம் ஆகிய இலக்குகளை நீங்கள் எட்டுவதற்கு உதவுகிறது.
புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள்
இறைச்சி, மீன், முட்டைகள், பருப்பு, டோஃபூ போன்ற புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் ஆகும். புரதச்சத்துக்கள் உடல் ஜீரணிக்க வேண்டுமென்றால், அதற்கு உங்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. இது உங்களுக்கு அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
மிளகாய்
மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற உட்பொருள்தான் மிளகாய்க்கு அதன் சூடு மற்றும் காரத்தன்மையைக் கொடுக்கின்றன. இது உங்கள் உடலின் வளரிசிதை தற்காலிகமாக அதிகரிக்கும். இதனால் கொழுப்பை எரிக்கும் திறன் அதிகரிக்கும். உங்களுக்கு கலோரிகளின் அளவும் அதிகம் செலவாகும். இது மிளகாயை உடல் வளர்சிதையை அதிகரிக்கும் உணவாக மாற்றுகிறது.
காஃபி
காஃபியில் உள்ள கெஃபைன் என்ற உட்பொருள், உங்கள் உடலில் வளர்சிதையைத் தூண்டி, உங்கள் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டும் ஒரு உணவாக உள்ளது. இது உங்களின் கொழுப்பை எரிக்கும் திறனை அதிகரிக்கிறது. குறிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, இது உங்களின் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பருப்பு
பீன்ஸ், பருப்புகள் மற்றும் பச்சைப் பட்டாணிகளில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளது. இது உங்களின் உடல் வளர்சிதையை அதிகரிக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
ப்ராக்கோலி
முட்டைகோஸ் குடும்ப வகையைச் சேர்த்து ப்ராக்கோலி போன்ற காய்கறிகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துபிறது. இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
பெரிகள்
ப்ளூ பெரிகள், ராஷ் பெரிகள் மற்றும் ஸ்ட்ராபெரிகள் ஆகியவற்றி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் கொழுப்பு எரிக்கும் திறனையும் மேம்படுத்துகிறது.
இஞ்சி
இஞ்சி, அதன் சூட்டை அதிகரிக்கும் குணங்கள், இஞ்சியை உடலின் சூட்டை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாக மாற்றுகிறது. இதனால் உடலின் வளர்சிதை அதிகரிக்கிறது. இது உங்களின் செரிமானத்தை அதிகரிக்கிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கிரீன் டீ
கிரீன் டீயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள கேட்சின்கள் கொழுப்பு கரைய உதவுகிறது. இது கொழுப்பு வளர்சிதையை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் கொழுப்பை குறைக்கவேண்டுமெனில், உடற்பயிற்சியுடன் கிரீன் டீயை பருகுவதையும் வழக்கமாகிக்கொள்ளுங்கள்.
கீரைகள்
பாலக் போன்ற கீரைகளில் கலோரிகள் குறைவு. ஆனால் இவற்றில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இவையனைத்தும், உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தண்ணீர்
அதிகம் தண்ணீர் பருகி, உங்கள் உடலில் நீர்ச்சத்துக்கள் குறையாமல் பார்த்துக்கொள்வது உங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இது உங்கள் உடல் வளர்சிதையை ஆரோக்கியமாக்கும். குறிப்பாக சாதாரண தண்ணீர் அதிகம் பருகுவது தற்காலிகமாக உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கச் செய்யும் வழிகளுள் ஒன்றாகும். இதனால் உங்கள் உடல் இளஞ்சூடாகிறது. உங்கள் உடலின் வெப்பநிலையும் சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்