இந்த அறிகுறிகள் தோன்றுகிறா? அச்சச்சோ உங்கள் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லை! டேக் கேர்!
உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று பாருங்கள்.

உடலுக்கு ஏன் ஊட்டச்சத்துக்கள் தேவை தெரியுமா? உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக்கொடுத்து உங்களுக்கு நோய் ஏற்படாமல் தடுப்பதே ஊட்டச்சத்துக்கள்தான். உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவது என்பது, உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதால்தான். இதனால் உங்கள் உடலில் எண்ணற்ற நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. இது உங்கள் உடல் வளர்ச்சியை பாதிக்கிறது. எனவே உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதை, ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது நல்லது. அப்போதுதான் நீங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதில் இருந்து மீள முடியும். உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதற்கான அறிகுறிகள் இவைதான்.
உடல் எடையிழப்பு
உங்களுக்கு திடீரென எடையிழப்பு ஏற்பட்டால், உங்கள் உடலில் கலோரிகள் குறைகிறது மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைகிறது என்பதற்கான அறிகுறியாகும். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும், உங்கள் உடலில் ஆற்றல் அளவையும் பாதிக்கிறது.
வளர்ச்சியில் தடை
குழந்தைகளுக்கு எடை மற்றும் உணரம் அதிகரிப்பதில் தாமதம் ஏற்படலாம். அவர்களுக்கு போதிய அளவு புரதச்சத்துக்களும், கலோரிகளும் கிடைக்கவில்லையென்றால் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவார்கள். எனவே அவர்கள் சரியான வயதில், சரியான அளவு எடை மற்றும் உயரத்தை எட்டாவிட்டால் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.