சர்க்கரை நோயாளிகளா நீங்கள்? எனில் இந்த பழங்களை மட்டும் சாப்பிடும்போது கவனம் தேவை!
இந்தப் பழங்களை சாப்பிடும்போது சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்கவேண்டும்.
ஆரோக்கியமான வழிகளில் பழங்களை உட்கொள்ளும் சில வழிகளையும் இங்கு பார்க்கலாம். அதே நேரத்தில் சர்க்கரை அதிகம் நிறைந்த பழங்களும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்கவேண்டும. பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவைதான். எனினும் அதில் சர்க்கரை அளவுகள் அதிகம் உள்ளது. ஆனால் இந்தப்பழங்களை நீங்கள் சாப்பிடும்போது உங்களுக்கு அதிக கவனம் தேவை. இது உங்கள் உடலில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்திவிடும். ஆனால் அப்படி நடந்துவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். எனவே இந்தப் பழங்களை நீங்கள் சாப்பிடும்போது மிகவும் கவனம் தேவை. இதை நீங்கள் வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக சர்க்கரை கொண்ட பழங்கள் எவை என்று பாருங்கள். இதை நீங்கள் ஆரோக்கியமான வழிகளில் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆப்பிள்
ஒரு ஆப்பிளில் 19 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் சீஸ் அல்லது நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராது. எனவே குறைவான அளவு, ஆரோக்கியமான ஸ்னாக்ஸாக இதை சாப்பிடுங்கள்.
தர்பூசணி
ஒரு கப் தர்ப்பூசணியில் 9 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். ஆனால் இதை சாப்பிடும்போது புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளும் அவசியம். எனவே நட்ஸ், கிரீக் யோகர்ட் சேர்த்து சாப்பிடும்போது உங்கள் உடல் சர்க்கரையை மெதுவாகவே உறிஞ்ச உதவுகிறது.
திராட்சை
ஒரு கப் திராட்சையில் 23 கிராம் சர்க்கரை உள்ளது. இது உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வாகும். எனவே ஃபிரஷ்ஷான திராட்சைகளை உட்கொள்வதை வழக்கமாகக்கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சைகளைவிட பச்சையாக சாப்பிடுவது நல்லது. உலர்ந்த திராட்சையில் அதிகம் சர்க்கரை உள்ளது. இதை சாப்பிடும்போது புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சீஸ் போன்ற உணவுகளுடன் சாப்பிடுவது நல்லது.
மாம்பழம்
ஒரு மாம்பழத்தில் 46 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் சாப்பிட விரும்பினால், குறைவான அளவு பழத்தை, நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுடன் சாப்பிடவேண்டும். இதை சியா விதைகள் அல்லது நட்ஸ்களுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். இது உங்கள் உடலில் ரத்தச்சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவும்.
பேரிக்காய்
ஒரு பேரிக்காயில் 17 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் ஸ்னாக்சாக சாப்பிடலாம். இதை உங்கள் சாலட்கள் மற்றும் மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதை நீங்கள் சிக்கன் போன்ற புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு சமமான அளவு சர்க்கரை கிடைக்கும்.
மாதுளை
ஒரு மாதுளை பழத்தில் 24 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் மிதமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் இதயத்துக்கு இதமான கொழுப்பு உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். வால்நட்கள், அவகேடோக்களுடன் சாப்பிட்டால் இதன் சர்க்கரை அளவை சமப்படுத்தப்படும். இது உங்கள் பழத்தின் ஊட்டச்சத்து நன்மையையும் அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்
ஒரு கப் அன்னாசிப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை உள்ளது. இதை புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளுடன் மட்டுமே சேர்த்து சாப்பிடவேண்டும். காட்டேஜ் சீஸ், உங்கள் உடலில் இயற்கை சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. உங்களை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
அத்திப்பழம்
ஒரு அத்திப்பழத்தில் 8 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் இயற்கை இனிப்பாகப் பயன்படுத்தலாம். இதை ஓட்ஸ் மற்றும் ஸ்மூத்திகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஓட்ஸை, சமமான ஊட்டச்சத்து உணவுகளுடன் எடுத்துக்கொள்ளலாம்.
செரிகள்
ஒரு கப் செரியில் 18 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் உள்ள சர்க்கரை அளவு, புரதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு சிறப்பான தேர்வாகும்.
வாழைப்பழம்
ஒரு வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரை உள்ளது. இதை நீங்கள் அளவாக சாப்பிடவேண்டும். இதை ஆரோக்கிய கொழுப்புக்களுடன் சேர்த்து எடுத்துககொள்ளவேண்டும். பாதாம் பட்டருடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உங்கள உடல் சர்க்கரை மிதமாக உறிஞ்சும். எனவே இந்த பழங்களை இங்கு கொடுக்கப்பட்டுள்ளதுபோல் சாப்பிட்டு மகிழுங்கள்.
தொடர்புடையை செய்திகள்