Women Health : நீங்கள் 40 வயதைக் கடந்த பெண்ணா? கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள் என்னவென்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women Health : நீங்கள் 40 வயதைக் கடந்த பெண்ணா? கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள் என்னவென்று பாருங்கள்!

Women Health : நீங்கள் 40 வயதைக் கடந்த பெண்ணா? கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 13, 2025 11:35 AM IST

40 வயதைக் கடந்த பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்ன?

நீங்கள் 40 வயதைக் கடந்த பெண்ணா? கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள் என்னவென்று பாருங்கள்!
நீங்கள் 40 வயதைக் கடந்த பெண்ணா? கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள் என்னவென்று பாருங்கள்!

முட்டைகள்

100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்குத் தேவையான முழு புரதம் ஆகும். இதில் உங்கள் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன. வைட்டமின்களும், மினரல்களும் உங்கள் தசைகளில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கள் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

மீன்

சால்மன், சூரை போன்ற மீன்களை நீங்கள் 100 மட்டும் எடுத்துக்கொண்டாலே போதும். அது உங்களுக்கு 20 முதல் 25 கிராம் புரதத்தைக் கொடுக்கிறது. இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூளையின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

பாதாம்

100 கிராம் பாதாமில் 21 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

முளைக்கட்டிய பாசிப்பயிறு

100 கிராம் முளை கட்டிய பாசிப்பயிறில் 24 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இது எளிதாக செரிக்கக் கூடியது ஆகும். நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. இது செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கள் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்கிறது.

பருப்புகள்

100 கிராம் பருப்பில் 25 கிராம் புரதச்சத்து உள்து. இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த தாவர அடிப்படையிலான உணவு பருப்புதான். இது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதை உங்கள் சரிவிகித உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

சியா விதைகள்

100 கிராம் சியா விதைகளில் 17 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. இதை உங்கள் சரிவிகித உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சோயா

100 கிராம் சோயாவில் 52 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. புரதச்சத்துக்கள் அதிகம் கொண்ட, தாவர அடிப்படையிலான, இறைச்சிக்கு மாற்றான சோயா பீன்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் தசைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதை நீங்கள் பல்வேறு உணவுகளிலும் சேர்த்து சாப்பிடும்போது, அது உங்கள உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

கடலை

100 கிராம் கடலையில் 25 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் புரதம், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் ஆற்றல் என அனைத்தும் உள்ளது. இதை நீங்கள் உங்கள் ஊட்டச்சத்துக்கள் தேவைக்காகவும், உங்களுக்கு திருப்தி கொடுக்கும் ஸ்னாக்ஸாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.