மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு திணையிலே அதை செய்துவிடலாமா? இதோ ஈஸி ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு திணையிலே அதை செய்துவிடலாமா? இதோ ஈஸி ரெசிபி!

மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு திணையிலே அதை செய்துவிடலாமா? இதோ ஈஸி ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Oct 25, 2024 03:48 PM IST

மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு தினையிலே அதை செய்துவிடலாமா? அதை செய்வதும் எளிது. இதோ ஈசியா திணை மோத்தி லட்டு ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு திணையிலே அதை செய்துவிடலாமா? இதோ ஈஸி ரெசிபி!
மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு திணையிலே அதை செய்துவிடலாமா? இதோ ஈஸி ரெசிபி!

திணையின் நன்மைகள்

இதன் குறைவான கிளைசமிக் அளவுகள், கணைய செல்களை இன்சுலின் தயாரிக்க தூண்டுகிறது. இந்த ஹார்மோன் ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்த சர்க்கரை உயர்வதை குறைக்க உதவுகிறது. இன்சுலினுக்கு உடல் செல்களின் பங்களிப்பை அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்சுலின்தான் ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதனால் திணையை உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

திணையில் உள்ள சத்துக்கள்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது. திணையில் உள்ள பூஞ்ஜைக்கு எதிரான தன்மைகள் நமது உடலில் பூஞ்ஜை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. அனைத்து சிறு தானியங்களும் உதவுகிறது.

குறிப்பாக திணை அதிகளவில் உதவுகிறது. திணையில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. இது இரும்பு பற்றாக்குறையை போக்கி, அனீமியாவை போக்குகிறது. நார்ச்சத்து பித்தப்பை கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. பித்தம் அதிகம் சுரப்பதையும் தடுக்கிறது. பித்த கொழுப்பையும் குறைக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

தேவையான பொருட்கள்

திணை – அரை கப்

சர்க்கரை – ஒரு கப்

நெய் – தேவையான அளவு

ஃபுட் கலர் – ஆரஞ்சு (சிறிதளவு)

ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

வெள்ளரி விதைகள் – 4 ஸ்பூன்

செய்முறை

திணையை எடுத்து 8 மணி நேரம் அல்லது ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும். ஊறிய திணையை நன்றாக அலசிட்டு வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்தவுடன் சிறிது நேரம் ஆறவைத்துவிடவேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிடவேண்டும். அதில் திணையை சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். கவனமாக வேகவிடவேண்டும். வெந்தவுடன், அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இப்போது ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து உடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைந்தவுடன் வேகவைத்து வடித்து வைத்துள்ள திணையை சேர்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கலந்துவிட்டு, ஃபுட்கலர் சேர்க்கவேண்டும்.

(உங்களுக்கு ஃபுட் கலர் தேவைப்படவில்லையென்றாலும் விட்டுவிடலாம். மஞ்சள் நிறத்தில் லட்டு இருக்கவேண்டும் என்று விரும்பினால், மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம்)

இரண்டும் சேர்ந்து கெட்டிப்பதம் வந்தவுடன், அதில் ஏலக்காய் தூள் மற்றும் வெள்ளரி விதைகளை தூவி இறக்கிவிடவேண்டும். ஆறியவுடன் எடுத்து சிறுசிறு லட்டுகளாகப் பிடித்துக்கொள்ளவேண்டும்.

இதை ஒரு நாளில் காலி செய்துவிடவேண்டும். நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது என்பதால், தீபாவளி அன்றைக்கு மட்டும் கொஞ்சமாக செய்துகொள்ளுங்கள். இதன் சுவையும் நன்றாக இருக்கும். வழக்கமான மோத்தி லட்டுகளைப் போல் இருக்கும்.

கட்டாயம் இந்த தீபாவளிக்கு இந்த லட்டு செய்துவிடுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சுவையில் அசத்தும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் செய்வீர்கள். கட்டாயம் இந்த தீபாவளிக்கு செய்து, சாப்பிட்டு மகிழுங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.