தோட்டம் அமைக்க துவங்குபவரா நீங்கள்? இதோ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? இந்த 11 குறிப்புகள் உதவும்!
தோட்டம் அமைக்க துவங்குபவர் என்றால் உங்களுக்கு இந்த குறிப்புகள் உதவும்.

நீங்கள் தோட்டம் அமைக்க துவங்குபவர் என்றால், நிபுணர்கள் கூறுவதை முதலில் கேளுங்கள். நிபுணர்கள் தோட்டம் அமைப்பது குறித்து கூறும் டிப்ஸ்களைக் கேட்டால், உங்கள் தோட்டமும் தரமானதாக இருக்கும். முதல் முறை நீங்கள் தோட்டம் அமைப்பவர் என்றால் உங்களுக்கு மனதில் எண்ணற்ற கேள்விகள் இருக்கும். ஆனால் யாரிடம் கேட்பது, சந்தேகங்களை தீர்த்துக்கொள்வது என்ற எண்ணமும் இருக்கும். எனவே அதற்கு உதவும் வகையில், உங்களுக்கு நிபுணர்கள் இங்கு சில டிப்ஸ்களை கொடுக்கிறார்கள். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் பதற்றம் இன்றி தோட்டம் அமைக்கலாம்.
மண் தொட்டியைப் பயன்படுத்துங்கள்
நீங்கள் உங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க பயன்படுத்தும் தொட்டிகள் பிளாஸ்டிக் அல்லது மற்ற எதிலும் ஆன தொட்டிகளைப் பயன்படுத்தவேண்டாம். மண் தொட்டிகளை தேடி தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். அவை செடிகளை தாங்கும் அளவுக்கு உறுதியானதாக இருக்கும். அதிகளவு தண்ணீரை உறிஞ்சி உள்ளே மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
தொட்டியில் சிறிய துவாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்
தோட்டம் அமைக்கும் துவக்கத்தில் தாவரங்களை நடுவதை மேம்படுத்த வேண்டும் என்பதில் தோட்டம் அமைப்பவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் அவர்கள் பழைய பாட்டில்கள், பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் தாங்களே தொட்டிகளை உருவாக்கி, மண் கலவையை போட்டு தாவரங்களை வளர்க்க துவங்குவார்கள். இதனால் தொட்டிகளில் துவாரங்களைப் போடுவதற்கு மறந்துவிடுவார்கள். எனவே நீங்கள் எந்த பாத்திரத்தை பயன்படுத்தினாலும் அதில் துவாரம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதிக தண்ணீர் வெளியேறிவிடும். இல்லாவிட்டால், தண்ணீர் தொட்டியிலே தங்கி வேர் அழுகி தாவரம் கெட்டுப்போய்விடும்.
