இரவு நேரத்தில் படிப்பதில் இத்தனை நன்மைகள் உள்ளதா? தேர்வுகளுக்கு தயாராகும் டிப்ஸ்கள் இதோ!
இரவு நீண்ட நேரம் விழித்திருந்து படிப்பது உங்களுக்கு நன்மையைத்தருமா? எத்தனை பலன்கள் என்று பாருங்கள்.

மாணவர்கள், குறிப்பாக தங்களின் 10 அல்லது 12ம் வகுப்பு பொதுதேர்வுகளுக்க்கு தயாராகும் மாணவர்கள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் படிப்பது மிகவும் அவசியம். ஆனால் எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்று அவர்களுக்கு தெரியாது.
ஒவ்வொருவரும் ஒருமுறையை பின்பற்றி படிப்பார்கள். ஒரு சிலருக்கு சத்தம்போட்டு படிப்பது வழக்கமாக இருக்கும். ஒரு சிலர் மெதுவாகப்படிப்பார்கள். ஒரு சிலர் இரவில், அதிகாலையில், பகல் நேரத்தில் என வெவ்வேறு நேரங்களில் படிப்பார்கள். இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
இரவு நேரத்தில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
குறைந்த அளவு கவனச்சிதறல்கள்
இரவு நேரத்தில் குறைவான அளவு கவனச்சிதறல்களே ஏற்படும். இரவின் அமைதி உங்களுக்கு படிக்கும் மனநிலையை உருவாக்கித்தரும். யாரும் இடையூறு செய்யமாட்டார்கள். இரவில் வாகன சத்தங்கள், மற்ற எவ்வித சத்தங்களும் குறைவாக இருக்கும். இதனால் உங்களின் கவனம் அதிகரிக்கும். நீங்கள் முழு கவனத்தையும் எவ்வித இடையூறும் இன்றி படிப்பில் செலுத்தலாம். இதனால் இரவு உங்களுக்கு படிக்க உகந்த நேரமாக இருக்கும்.