வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி தொல்லையா? எக்ஸ்பைரியான மாத்திரை, டீத்தூளே போதும்! இது சூப்பர் ஐடியாவா இருக்கே!
வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி தொல்லையா? எக்ஸ்பைரியான மாத்திரை, டீத்தூள் இருந்தாலே போதும் எளிதாக அவற்றை விரட்ட முடியம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகளும், பல்லிகளும் வந்து தொல்லை தந்துகொண்டிருக்கிறாதா? ஒரு சிலருக்கு இவற்றை பார்த்தாலே அலர்ஜிதான், தெறித்து ஓடுவார்கள். அவர்களுக்கு கரப்பான் பூச்சிகள் வீட்டில் உள்ள சிறிய அழுக்குகளை சாப்பிட்டு வாழக்கூடியவையாகும். கரப்பான் பூச்சிகளைப்பார்த்தலே தெறித்து ஓடுபவர்களுக்கு மட்டும் இந்த ஐடியா கிடைத்தால் நல்லது என்று எண்ணுவார்கள். மேலும் அவர்கள் வீட்டில் பூச்சிகளை விரட்ட பல வழிகளையும் கையாண்டு இருப்பார்கள். ஆனால் அவை அவர்களுக்கு கைகொடுக்காமல் போயிருக்கும் அல்லது நீங்கள் கரப்பான் பூச்சி மருந்துகளை வாங்கி வீடுகளுக்கு தெளித்தால் அது நல்லது கிடையாது. அவற்றில் வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். அது உங்கள் உடலில் பல்வேறு உபாதைகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே கரப்பான் பூச்சிகளைக் ஓடவிட இயற்கை வழிகள்தான் சிறந்தது. இதனால் நீங்கள் வேதிப்பொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவையிருக்காது. நாம் கரப்பான் பூச்சிகளை விரட்டுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
டீத்தூள் – 2 ஸ்பூன்
மாத்திரைகள் – 2 (காலாவதியான எந்த மாத்திரைகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் சூடாக்கவேண்டும். அதில் மாத்திரைகள் மற்றும் டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அது நன்றாக கொதித்து வரும்போது, மாத்திரை கரைந்து டீத்தூளுடன் கலந்திருக்கும்.
இந்த தண்ணீரை அப்படியே சிங்க்கின் உள்புறம், பாத்ரூமில் தண்ணீர் போகும் ஓட்டை என பகுதிகளில் ஊற்றவேண்டும். அப்படி ஊற்றும்போது ஏற்படும் கடும் துர்நாற்றம் கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. அவை ஓடிவிடும். வீட்டில் பல்லிகள் ஒளிந்துகொள்ளும் இடத்தை கண்டுபிடித்து அந்த இடங்களில் ஸ்பிரே செய்துவிட்டால், பல்லிகள் அங்கு வந்து ஒளிந்துகொள்ளாமல் இருக்கும். இதை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு இது வேறு எந்த பிரச்னைகளையும் கொண்டுவராது. உங்கள் வீட்டில் கெமிக்கல் இல்லாமல் பூச்சிகளை விரட்ட முடியும்.
கரப்பான் பூச்சிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
கரப்பான் பூச்சிகள் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தோ அல்லது அதற்கு முன்னர் இருந்தோ நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் வசிக்கக்கூடியவை. ஆர்கானிக் கழிவுகளை உட்கொண்டு வாழும் பூச்சியினம் ஆகும். கரப்பான் பூச்சிகள் தங்கள் தலை இல்லாமல் ஒரு வாரம் வசிக்கும். ஏனெனில் அதன் மூளை அதன் உடலை கட்டுப்டுத்தவில்லை. அதனால் தண்ணீர் மட்டும் பருக முடியாது. தாகம் அதிகரித்து இறக்கிறது. வேகமாக ஓடும் பூச்சியாகும். சுவற்றில் தாவக்கூட கரப்பான்பூச்சிகளால் முடியும். ஒருமுறை மட்டுமே பெண் கரப்பான்பூச்சி உடலுறவு கொள்ளும். ஆண்களிடம் இருந்து பெரும் விந்தணுக்களை சேர்த்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும். ஒரே நேரத்தில் பல முட்டைகளையிட்டு பாதுகாக்கும். தவழும், தாவும் கரப்பான்பூச்சிகளும் உள்ளன. முட்டைகள் கடும் பிரச்னைகளைக் கூட தாங்கும் வகையில் கடுமையானதாக இருக்கும்.
இதுபோன்ற சமையலறை குறிப்புகள், சமையல் குறிப்புகள், ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காக ஹெச்.டி தமிழ் அன்றாடம் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இதனால் உங்களுக்கு நிச்சயம் கட்டாயம் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவற்றை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். உங்கள் தேவையான தகவல்களைப் பெற்று பலன்பெறுங்கள். ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்