தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Anxiety Attack : பதற்றத்தை குறைக்கவேண்டுமா? உங்கள் மனதை அமைதிப்படுத்த சிறந்த வழிகள் இதுதான்!

Anxiety Attack : பதற்றத்தை குறைக்கவேண்டுமா? உங்கள் மனதை அமைதிப்படுத்த சிறந்த வழிகள் இதுதான்!

Priyadarshini R HT Tamil
Jun 30, 2024 06:00 AM IST

Anxiety Attack : பதற்றத்தை குறைக்கவேண்டுமா? உங்கள் மனதை அமைதிப்படுத்த சிறந்த வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Anxiety Attack : பதற்றத்தை குறைக்கவேண்டுமா? உங்கள் மனதை அமைதிப்படுத்த சிறந்த வழிகள் இதுதான்!
Anxiety Attack : பதற்றத்தை குறைக்கவேண்டுமா? உங்கள் மனதை அமைதிப்படுத்த சிறந்த வழிகள் இதுதான்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி பழகுதல்

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்வது எளிதான ஒன்றுதான் ஆனால், அது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் சக்திவாய்ந்த வழிகளுள் ஒன்றாகும். உங்களுக்கு ஏற்படும் பதற்றத்தை குறைக்கும். உங்கள் மூச்சை கவனியுங்கள். உங்களின் இதயத்துடிப்பை குறைத்து, உங்களுக்கு அமைதியை ஏற்படுத்துகிறது.

கிரவுண்டிங் நுட்பங்கள்

கிரவுண்டிங் நுட்பங்கள் என்பதை உங்களின் பதற்றத்தை குறைத்து உங்களை நிகழ்காலத்தில் இருக்கச்செய்யும். அது உங்களுக்கு பதற்றத்தின்போது உதவியாக இருக்கும். ஒரு சக்திவாய்ந்த கிரவுண்டிங் நுட்பம் என்றால் அது, உங்களைச் சுற்றி நீங்கள் பார்க்கக்கூடிய 5 பொருட்களை கூறவேண்டும். நீங்கள் தொடக்கூடிய 4 பொருட்களை கூறவேண்டும். நீங்கள் கேட்கக்கூடிய 3 பொருட்களை கூறவேண்டும்.

தசைகளை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்

தசைகளை ரிலாக்ஸ் செய்யும் சக்திவாய்ந்த முறைகள் என்பது, உங்கள் உடலில் உள்ள பல்வேறு தசைக்குழுக்களை மெதுவாக ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இது உங்கள் உடலில் ஏற்படும் டென்சனைப்போக்குகிறது. இது உங்களின் மனதை அமைதிப்படுத்துகிறது.

தியானம்

மனநிறைவைத்தரும் தியானம், நீங்கள் கவனம் செலுத்துவதில் தொடர்புடையது. குறிப்பாக எவ்வித விமர்சனங்களும் இன்றி நிகழ்காலத்தில் உங்களை வாழச்செய்கிறது. தியானத்தை பழகும்போது, உங்களின் விழிப்புணர்வு அதிகரிக்கும். உங்கள் சிந்தனைகள் மற்றும் உணர்வுகளில் நீங்கள் கவனம் செலுத்த உதவுகிறது. உங்களின் பதற்றத்தை குறைக்கிறது.

அமைதியான இடத்தை மனதில் எண்ணுங்கள்

அமைதியான, அழகான இடத்தை மனதில் எண்ணுங்கள். உங்கள் மனதில் ஒரு அமைதியான இடத்தில் தென்றல் வருடும் பறவைகளின் ஒலி கேட்கும் ஒரு அருவி அல்லது காட்டுப்பகுதியில் நீங்கள் தனியாக இருப்பதுபோல் எண்ணிக்கொள்ளுங்கள். இது உங்களை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்க உதவும். இது உங்களின் கவனத்தை மாற்றி உங்களின் பதற்றத்தைப்போக்கும். இது ஒரு அமைதியை உருவாக்கும்.

நேர்மறை உறுதிமொழிகள்

நேர்மறை உறுதிமொழிகள் சிறியவைதான், அவை உங்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகள், அவற்றை நீங்கள் உங்களிடம் மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டிருக்கும்போது, உங்களுக்கு ஏற்படும் பதற்றங்கள் குறையும். 

இவை உங்களின் மனநிலையை மாற்ற உதவுகிறது. எதிர்மறை சிந்தனைகளை குறைக்கிறது. உங்களுக்கு ஏற்படும் பதற்ற மனநிலையைப்போக்க நேர்மறை உறுதிமொழிகள் உதவும். உங்களின் மனதை அமைதிப்படுத்தும்.

இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் ஒரு சிறிய இடைவெளி எடுப்பது உங்கள் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்த உதவும். எனவே ஒரு மெல்லிசையைக் கேட்பது, இயற்கையின் ஒலிகளை கேட்பது, ஒரு நறுமணம் கமழும் சென்டைப் பயன்படுத்துவது, உங்கள் கர்சீஃபில் லாவண்டர் சென்டை அடித்து வைத்துக்கொண்டு அவற்றை முகர்ந்துகொண்டே இருந்தால், உங்களின் மனம் அமைதிபெறும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள் உங்களின் பயத்தை போக்க உதவும். இவை உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. இதனால் உங்கள் உடல் இயற்கையாக மனஅழுத்தத்தை குறைக்கிறது. உங்கள் உடல் இயங்கும்போது உங்கள் உடலில் கூடுதலான இருக்கும் அட்ரெனலைன்களை எரிக்க உதவுகிறது. இது உங்களின் பதற்றத்தை குறைத்து உங்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது.

இந்த வழிகளைப்பின்பற்றி உங்கள் பதற்றத்தைப்போக்கி மகிழ்சட

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.