Antioxidant Rich Foods : ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த இந்த 7 உணவுகள் பற்றி தெரியுமா?
Antioxidant Rich Foods : ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த இந்த 7 உணவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் இதய ஆரோக்கியம் என்பது முழு உடல் ஆரோக்கியம் ஆகும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்பவை, உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்தும், வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்க முக்கியமானது. இவை இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் உங்கள் உடலில் செல்களை சேதப்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தான் உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் என்று கூறப்படுகிறது. அது இந்த 7 உணவுகளில் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது.
கீரைகள்
பச்சை கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள ஃப்ளாவனாய்ட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பெரிகள்
ஸ்டராபெரிகள், ப்ளூபெரிகள் மற்றும் ராஷ்பெரிகளில் ஆந்தோசியானின்கள் அதிகம் உள்ளன. அவை சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்று கூறப்படுகிறது. இது உங்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஆக்ஸிடேட்வ் அழுத்தம் இருந்தால் உங்கள் உடலில் செல்களில் சேதம் ஏற்படும். அதைத்தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காப்பதாக கூறப்படுகிறது.
டார்க் சாக்லேட்
சாக்லேட்கள் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் டார்க் சாக்லேட்களை சாப்பிட யாருக்கும் பிடிக்காதுதான். ஆனால் அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுதாகவும், வீக்கத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. சிறிய அளவு மட்டுமே கூட உங்கள் இதயத்து ஆரோக்கிய நன்மைகளையும் கொடுத்து, சர்க்கரை அளவையும் ஏற்றாமல் காப்பதாகக் கூறப்படுகிறது.
தக்காளி
தக்காளியில் லைக்கோபென்கள் அதிகம் உள்ளது. இது முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதன் மூலம் உடலுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது ரத்த நாளங்களையும் சேதத்தில் இருந்து காக்கிறது.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளதால், இவை உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
நட்ஸ்கள் மற்றும் விதைகள்
பாதாம், வால்நட், ஃப்ளாக்ஸ் விதைகள், சூரிய காந்தி விதைகள் போன்ற நட்ஸ்கள் மற்றும் விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவற்றில் ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது உங்கள் உடலில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைத்து உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்