Antioxidant Drink : கிரீன் டீயைவிட உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்கக்கூடிய பானம்! தினமும் கட்டாயம்!
Antioxidant Drink : கிரீன் டீயைவிட உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை வழங்கக்கூடிய இந்த பானத்தை தினமும் கட்டாயம் எடுத்துக்கொள்வது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 1
புதினா – 5 இலைகள்
இஞ்சி – ஒரு துண்டு
ஓமம் – ஒரு ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை தட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் தட்டிய நெல்லிக்காய் மற்றும் இஞ்சி, ஓமம், புதினா இலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்றாக கொதித்தபின்னர் வடிகட்டி, அதில் தேன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை இருவேளை பருகினால் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதாவது உடல் நோய்களை எதிர்த்து போராட தேவையான திறனை வழங்குகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
உலகம் முழுவதும் இதய நோய்கள்தான் அதிக மரணத்துக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அவற்றைத்தடுக்க கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் தேவை. ஃப்ரி ராடிக்கல்கள் என்பவை நச்சுக்கள் நிறைந்த உட்பொருட்கள்.
அவற்றை குறைப்பதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், வீக்கம் மற்றும் இதய நோய் ஆகியவற்றை குறைக்கிறது.
இதயம் என்பது ஒரு முக்கியமான உறுப்பாகும். இதை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் வலுவிழக்கச்சசெய்யும். இதயம் மற்றும் ரத்த நாள செல்களில் ஃப்ரிராடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், இது உடலில் எண்ணற்ற வளர்சிதை செல்களை உற்பத்தி செய்கிறது.
மேலும் வெளியில் இருந்து வரும் உணவு மற்றும் மாசு போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் மற்றும் மற்ற இதய கோளாறுகளும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்பட காரணமாகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பாதுகாவலராக இருக்கின்றன. இவை ஃப்ரிராடிக்கல்களைக் குறைத்து உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்த்தை குறைக்கின்றன.
வைட்டமின் சி, இ, ஏ போன்ற வைட்டமின்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் செலினியம், குரோமியம், மெக்னீசியம் மற்றும் சிங்க் போன்ற மினரல்களும் உள்ளது. கூடுதலான தாவர அடிப்படையிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ளேவனாய்ட்கள், ஃப்ளேவோனெஸ் மற்றும் பாலிஃபினால்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகளவில் உள்ளன. இவை இதயத்தை காக்கக்கூடியவை.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயத்துக்கு தரும் பாதுகாப்பை எண்ணற்ற ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. வைட்டமின் இ அதில் ஒரு முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தமனிகளில் ப்ளேக் உருவாகமல் தடுப்பதற்கு உதவும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்களில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்