தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Annapodi : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு பொடியை சாதத்தில் கலந்துகொடுத்தால் போதும்!

Annapodi : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு பொடியை சாதத்தில் கலந்துகொடுத்தால் போதும்!

Priyadarshini R HT Tamil
Jun 04, 2024 01:24 PM IST

Annapodi : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு பொடியை சாதத்தில் கலந்துகொடுத்தால் போதும்!

Annapodi : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு பொடியை சாதத்தில் கலந்துகொடுத்தால் போதும்!
Annapodi : சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு பொடியை சாதத்தில் கலந்துகொடுத்தால் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அவர்களுக்கு இந்த ஒரு பொடியை மட்டும் சோற்றில் பிசைந்து சாப்பிடக் கொடுங்கள் போதும். நன்றாக பசி எடுத்து அதிக உணவு உட்கொள்வார்கள்.

எனவே இந்தப்பொடியை தினமும் சாப்பாட்டுக்கு முன் சாப்பிட அறிவுறுத்த வேண்டும். முதலில் இந்தப் பொடியை சேர்த்து சாப்பிட்டுவிட்டு, பின்னர், அவர்களை சாம்பார், ரசம், தயிர் சேர்த்து சாப்பிட பழக்கலாம். அப்போது உங்கள் குழந்தைகளால் அதிகம் சாப்பிட முடியும். இந்தப் பொடி செரிமானத்தை தூண்டி, உங்கள் குழந்தைகளை அதிகம் சாப்பிட வைக்கும்.

தேவையான பொருட்கள்

கடுகு – அரை ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

உளுந்து – 3 ஸ்பூன்

கடலை பருப்பு – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காய்தூள் – கால் ஸ்பூன்

மல்லி விதைகள் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடாயை சூடாக்கி, கடுகை சேர்த்து அது நன்றாக பொரிந்தவுடன், அதை எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்.

பின்னர் மிளகை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவேண்டும். அதிலே உளுந்து மற்றும் கடலை பருப்பை சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுக்கவேண்டும்.

பின்னர் மல்லி விதைகளை சேர்த்து வறுக்கவேண்டும். பின்னர் பெருங்காயப் பொடியையும் அதிலே சேர்க்கவேண்டும்.

உப்பு சேர்த்த வறுத்து, அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக ஆறவிடவேண்டும்.

நன்றாக ஆறியவுடன், அதை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.

இந்தப்பொடியை வயிறு கோளாறுகளுக்கும் பயன்படுத்தலாம். வயிற்றில் உங்களுக்கு சிறிய பிரச்னைகள் ஏற்பட்டாலும், இந்தப்பொடியை சூடான சாதத்தில், நெய்யுடன் சேர்த்து சாப்பிட் சுவை மட்டுமல்ல, வயிறு உபாதைகளும் சரியாகும்.

குறிப்பாக சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப்பொடியை அவர்கள் உணவில் கலந்துகொடுத்தால், இது அவர்களுக்கு பசியைத் தூண்டி நன்றாக அவர்களை சாப்பிட வைக்கும். இதை யார் வேண்டுமானாலும், தினமும் சாப்பிடலாம். இந்தப்பொடியும் அன்னப்பொடியைப்போல் உங்கள் குழந்தைகளுக்கு நல்லது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்