தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Annapodi : உங்கள் குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களா? வத்தலான உடம்பும் வாலிப்பாக இந்தப்பொடி போதும்!

Annapodi : உங்கள் குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களா? வத்தலான உடம்பும் வாலிப்பாக இந்தப்பொடி போதும்!

Priyadarshini R HT Tamil
May 20, 2024 10:44 AM IST

Annapodi : உங்கள் குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களா? வத்தலான உடம்பும் வாலிப்பாக இந்தப்பொடி போதும்!

Annapodi : உங்கள் குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களா? வத்தலான உடம்பும் வாலிப்பாக இந்தப்பொடி போதும்!
Annapodi : உங்கள் குழந்தைகள் ஒல்லியாக இருக்கிறார்களா? வத்தலான உடம்பும் வாலிப்பாக இந்தப்பொடி போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அன்னப்பொடி செய்ய தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை – கால் கிலோ

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

கல் உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 10

செய்முறை

பொட்டுக்கடலையை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

மிளகு, சீரகம் இரண்டையும் நன்றாக வறுக்கவேண்டும்.

கறிவேப்பிலையையும் வறுக்கவேண்டும்.

வரமிளகாயையும், உப்பையும் சேர்த்து சிறுது நேரம் வறுத்துவிட்டு, கடைசியாக பெருங்காயத்தூளை சேர்த்து வறுக்கவேண்டும்.

பின்னர் அனைத்தையும் ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

அன்னப்பொடி தயார். இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடவேண்டும்.

குறிப்புகள்

இதை இட்லி, தோசைக்கும் நெய்யுடன் கலந்து தொட்டுக்கொள்ளலாம்.

இதை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும்.

இதை சாப்பிடும்போது, ஒல்லியான குழந்தைகள் கூட நல்ல எடை போடுவார்கள். ஒரே நாளில் எடை கூடாது. இதை குழந்தைகள் உணவில் தொடர்ந்து சேர்க்கவேண்டும்.

பொட்டுக்கடலையின் நன்மைகள்

பொட்டுக்கடலையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இது இந்தியாவில் பரவலாக விரும்பி உண்ணப்படும் ஒரு ஸ்னாக். இதை நீங்கள் தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடலாம். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது லோ கிளைசமிக் இன்டக்ஸ் உணவுகளில் உள்ளது.

அதனால் இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இது உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

புரதச்சத்துக்கள் நிறைந்தது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிக்கிறது.

புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

பொட்டுக்கடலையில் உள்ள புரதச்சத்த்க்கள் உடலில் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

பொட்டுக்கடலையில் உள்ள அதிகப்படியான இரும்பு, கால்சியம், ஃபோலேட், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி, நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இதை பல்வேறு உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்