தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Anemia Remedy This Powder Is Enough To Cure Anaemia And Skin Disease Take One Spoon Daily

Anemia Remedy : ரத்த சோகையை விரட்டி ஓடவிட இந்தப்பொடி போதும்!தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கங்க! சருமத்தும்க்கும் நல்லது!

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 09:43 AM IST

Anemia Remedy : ரத்த சோகை மற்றும் சரும நோயை போக்க இந்தப்பொடி போதும்!தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கங்க!

Anemia Remedy : ரத்த சோகை மற்றும் சரும நோயை போக்க இந்தப்பொடி போதும்!தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கங்க!
Anemia Remedy : ரத்த சோகை மற்றும் சரும நோயை போக்க இந்தப்பொடி போதும்!தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

ஏனெனில் இந்தப்பொடியில் பொட்டசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இது நமது உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து, ரத்தத்தை சுத்தம் செய்யும். மலச்சிக்கல் பிரச்னையை நீக்கி, உடல் சோர்வை போக்கி, கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும். வயதானாலும் தளர்வில்லாத நடையை ஏற்படுத்தும்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – ஒரு கட்டு

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

உப்பு -ஒரு ஸ்பூன்

செய்முறை

(முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து, நன்றாக காயவைத்துக்கொள் வேண்டும். துணியில் போட்டு நன்றாக சுற்றி மூடிவைத்து, காற்றோட்டமான இடத்தில் வைத்தால், நன்றாக உலர்ந்துவிடும். இவ்வாறு செய்யும்போது அதை எளிதாக காம்பு தனியாக, இலை தனியாக பிரிக்க முடியும். இதை வெயிலில் வைத்து உலர்த்தினால் அதன் மருத்துவ குணமும் போய்விடும் மற்றும் நிறமும் மாறிவிடும். எனவே நிழலில் தான் வீட்டுக்குள்தான் உலர்த்த வேண்டும். பின்னர் அதை எடுத்து தட்டினாலே இலைகள் நன்றாக உதிர்ந்து வரும்)

உதிர்ந்த இலைகளை நன்றாக காய வைக்கவேண்டும்.

ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைக்கும்போது மிளகு, சீரகம் மற்றும் சிறிது உப்பும் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வெளியிலே கூட வைத்து பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் கெட்டுப்போகாது. ஃபிரிட்ஜில் வைத்தால் 6 மாதங்கள் வரை கெடாது.

முருங்கைக்கீரை கிடைக்காதபோது இதுபோன்ற பொடிகள் உடலுக்கு நல்லது.

இந்தப்பொடியை சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

வழக்கமான சாம்பார், ரசம் சாப்பிடுவதற்கு முன் இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பொடியை நேரடியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சாதத்தில் பொடியை கலந்துவிட்டு, அதன் மீது சாம்பார் ஊற்றியும் சாப்பிடலாம். எப்படி வேண்டுமானாலும் இதை சாப்பிட்டு விடவேண்டும்.

ஒரு நாளில் ஒரு ஸ்பூன் பொடிக்க மேல் அதை நாம் பயன்படுத்தக்கூடாது. 5 கிராம்தான் இதன் அளவு.

இதை காலையில் சூடான தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது, அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை பொடியை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விடவேண்டும். பின்னர் அதில் அரை எலுமிச்சை பிழிந்து, துண்டு இஞ்சியை தட்டி சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் சிறிது தேன் கலந்து பருகலாம்.

இவ்வாறு எடுத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைந்து வரும். தோசை மீது தூவி சாப்பிடலாம். இட்லி பொடியுடன் கலந்து சாப்பிடலாம். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ரசத்தில் சேர்த்து சாப்பிடலாம். ரசத்தை கொத்தி வைக்கும்போது அதில் கடைசியாக இந்தப்பொடியை சேர்த்து கலந்து இறக்கினால் மணமணக்கும் ரசம் கிடைக்கும். ஆரோக்கியமும் நிறைய உண்டு. கண் பார்வை குறைபாடு, உடல் சோர்வு, மூட்டு வலி, கை-கால் வலி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது. ரத்தசோகைக்கு அருமருந்து, உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் இருந்து கிடைக்கும். எனவே கட்டாயம் இதை சேர்த்துக்கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்