ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: ஆந்திரா ஸ்பெஷல்.. ஆரோக்கியமும், சுவையும் மிக்க மொறுமொறுப்பான பருப்பு உருண்டை - சுவைத்து மகிழுங்கள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: ஆந்திரா ஸ்பெஷல்.. ஆரோக்கியமும், சுவையும் மிக்க மொறுமொறுப்பான பருப்பு உருண்டை - சுவைத்து மகிழுங்கள்

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: ஆந்திரா ஸ்பெஷல்.. ஆரோக்கியமும், சுவையும் மிக்க மொறுமொறுப்பான பருப்பு உருண்டை - சுவைத்து மகிழுங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 18, 2025 05:50 PM IST

அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும் புனுகுலுகளை கோதுமை, மைதா மாவுகளில் மட்டுமல்லாமல், புரதம் நிறைந்த பருப்பையும் வைத்து செய்யலாம். இவை சுவையாக மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். மூன்று பருப்பைக் கொண்டு பருப்பு உருண்டை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்

ஆந்திரா ஸ்பெஷல்.. ஆரோக்கியமும், சுவையும் மிக்க மொறுமொறுப்பான பருப்பு உருண்டை - சுவைத்து மகிழுங்கள்
ஆந்திரா ஸ்பெஷல்.. ஆரோக்கியமும், சுவையும் மிக்க மொறுமொறுப்பான பருப்பு உருண்டை - சுவைத்து மகிழுங்கள்

நம்மூர்களில் வடை, பஜ்ஜி எப்படியே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் மக்கள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆக புனுகுலு இருந்து வருகிறது. அரிசி மாவு, மைதா மாவ போன்றவற்றில் சீரகம் போன்ற சில பொருள்களை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து சமைப்பது தான் புனுகுலு. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் வெறும் மாவுகளில் மட்டுமல்லாமல் பருப்புகளை நன்றாக அரைத்து ஆரோக்கிய ஸ்நாக்ஸ் ஆகவும் தயார்படுத்தி சாப்பிடலாம்.

கோதுமை மாவு, மைதா மாவு மற்றும் இட்லி மாவுடன் மொறுமொறுப்பான சுவையுடன் இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் எதாவதொரு சட்னி சிறந்த சைடு டிஷ் ஆகவும் இருக்கும். வழக்கமாக மாவு வகைகளை வைத்து தயார் செய்யக்கூடிய புனுகுலுக்கு மாற்றாக பருப்பைக் கொண்டும் ஆரோக்கியம் மிக்க ஸ்நாக்ஸாக இதை தயார் செய்யலாம்.

பருப்பு வகைகளில் புரதம் நிறைந்திருப்பதால், அவற்றை சாப்பிடுவதும் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் பெறலாம். அந்த வகையில் பருப்பை வைத்து புனுகுலு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

பருப்பு புனுகுலு செய்ய செய்ய தேவையான பொருட்கள்

  • பச்சைப்பயறு - ஒரு கப்
  • கொண்டைக்கடலை - அரை கப்
  • துவரம்பருப்பு - கால் கப்
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • இஞ்சி - சிறிது அளவு
  • சீரகம் - ஒரு டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - இரண்டு அல்லது மூன்று
  • வெங்காயம் - ஒன்று
  • எண்ணெய் - வறுப்பதற்கு போதுமான

பருப்பு புனுகுலு (உருண்டை) செய்யும் முறை

  • முதலில் ஒரு கலவை பாத்திரத்தை எடுத்து அதில் பச்சை பயறு , கொண்டக்கடலை மற்றும் துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
  • பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி, பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் ஊற விடவும். (பருப்பை நீண்ட நேரம் ஊறவைப்பது அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது. அத்துடன் வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்னைகளை் ஏற்படுவதை தடுக்கிறது.

மேலும் படிக்க: ஜங்க் உணவுகளுக்கு நோ.. குழந்தைகளுக்கு பிடித்தமான கடலை பருப்பு மிக்ஸர் ஸ்நாக்ஸ்! வீட்டிலேயே எளிதாக செய்யலாம்

  • இரண்டு மணி நேரம் வரை ஊறவைத்த பருப்பை எடுத்து ஒரு மிக்ஸி போட்டு, அவை மென்மையான பேஸ்டாக மாறும் வரை அரைக்கவும்.
  • இப்போது ஒரு கலவை கிண்ணத்தை எடுத்து அதில் பருப்பு கலவையை சேர்க்கவும்.
  • சுவைக்கு உப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • எல்லாம் நன்றாக கலந்த பிறகு, மாவை உருட்டுவதற்கு ஏற்றவாறு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும்.
  • இப்போது ஒரு கடாயை எடுத்து ஆழமாக வறுக்க போதுமான எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடானதும், மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை இருபுறமும் திருப்பாமல் நடுத்தர தீயில் வறுக்கவும்.
  • உருண்டைகள் நிறம் மாறி மொறுமொறுப்பாக மாறியதும், கடாய்களிலிருந்து எடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.

மேலும் படிக்க: கடலை பருப்பு வைத்து இட்லி.. எப்படி செய்யலாம்ன்னு பாருங்க

  • அவ்வளவுதான், புரதம் நிறைந்த மொறுமொறுப்பான பருப்பு உருண்டைகள் தயார். நீங்கள் இந்த உருண்டையை தேங்காய் அல்லது கடலை பருப்பு சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். அதே போல் இஞ்சி சட்னி சிறந்த காம்போவாக இருக்கும்.

இந்த உருண்டையை காலையில் உணவாக சாப்பிடலாம், மாலையில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். நீங்கள் மொறுமொறுப்பான சுவை என்பதால் அதிகமாக சாப்பிடாமல் மிதமான அளவில் சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும். சுவையும், ஆரோக்கியமும் மிக்க ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திருப்தியும் பெறலாம்