Andra Poriyal Powder : இந்த ஒரு பொடிய போட்டு செய்ங்க உங்க வீட்டு பொரியல் அப்படி ஒரு சுவை கிடைக்கும்!
Andra Poriyal Powder : இந்த ஒரு பொடிய போட்டு செய்ங்க உங்க வீட்டு பொரியல் அப்படி ஒரு சுவை கிடைக்கும்.
வீட்டில் உள்ள மளிகை சாமான்களை வைத்தே செய்யலாம். இது ஆந்திரா பொரியல் பொடி. ஆந்திராவில் இதுபோன்ற பொரியல் பொடியை செய்து மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து பொரியலிலும் பயன்படுத்தி, பொரியலை அதிகப்பட்டுத்துகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
தேவையான பொருட்கள்
வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 15
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கொத்து
எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
(கருப்பு எள் அல்லது வெள்ளை எள் என எதனுடன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
பூண்டு – 5 பல்
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
வரமல்லி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, வர மிளகாய், சீரகம் என அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் நன்றாக வறுத்துக்கொள்ளலாம்.
அனைத்தும் பொன்னிறமானதுடன் தனியாக ஒரு தட்டில் ஆறவைத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை மற்றும் எள் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
இதனுடன் தட்டிய பூண்டு பல் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தும் ஆறியவுடன் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன், கடைசியாக மிளகாய் தூளை சேர்த்து ஒரு அடி அடித்து கொர கொர பொடியாக தயாரித்துக்கொள்ள வேண்டும்.
இதை நீங்கள் வீட்டில் பொரியல் மற்றும் வறுவல் செய்யும் உருளை, சேனை, வாழைக்காய், பீன்ஸ், பீட்ரூட், கேரட் என எந்த காயுடன் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். எந்த பொரியலும் கூடுதல் சுவையை கொடுக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்