Andra Papula Podi : உங்கள் உணவில் இந்த ஒரு பொடி மட்டும் போதும்! வழக்கத்தைவிட கூடுதலாக சாப்பிடுவீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Andra Papula Podi : உங்கள் உணவில் இந்த ஒரு பொடி மட்டும் போதும்! வழக்கத்தைவிட கூடுதலாக சாப்பிடுவீர்கள்!

Andra Papula Podi : உங்கள் உணவில் இந்த ஒரு பொடி மட்டும் போதும்! வழக்கத்தைவிட கூடுதலாக சாப்பிடுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 09, 2024 02:29 PM IST

Andra Papula Podi : உங்கள் உணவில் இந்த ஒரு பொடி மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். வழக்கத்தைவிட கூடுதலாக கட்டாயம் சாப்பிடுவீர்கள். நம்பவில்லையென்றால், முயற்சித்து பாருங்கள்.

Andra Papula Podi : உங்கள் உணவில் இந்த ஒரு பொடி மட்டும் போதும்! வழக்கத்தைவிட கூடுதலாக சாப்பிடுவீர்கள்!
Andra Papula Podi : உங்கள் உணவில் இந்த ஒரு பொடி மட்டும் போதும்! வழக்கத்தைவிட கூடுதலாக சாப்பிடுவீர்கள்!

இந்த பொடியை செய்வது எளிது என்பதால், வீட்டிலேயே சுலபமாக செய்தும் விடலாம். இந்தப்பொடியை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் ஒல்லியானவர்களின் உடல் வாகும் வாலிப்பாக மாறும். 

அதுதான் ஆந்திர பருப்புப் பொடி. இந்தப்பொடி ஆந்திரா மெஸ்ஸில் நீங்கள் உணவு உட்கொள்ளும்போது பரிமாறப்படும். சுவையில் அள்ளும். அதை நீங்கள் வீட்டிலே செய்யலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள் 

துவரம்பருப்பு – ஒரு கப்

உளுத்தம்பருப்பு – அரை கப்

பொட்டுக் கடலை – அரை கப்

கடலைப்பருப்பு – கால் கப்

(ஒரே கப்பை பயன்படுத்துங்கள்)

காய்ந்த கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

வர மிளகாய் – 15 முதல் 30 வரை (உங்கள் கார அளவுக்கு ஏற்ப)

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன் அல்லது

கட்டிப்பெருங்காயம் – 4 சிறிய உருண்டைகள்

பூண்டு – 10 பல்

உப்பு – தேவையான அளவு

செய்முறை 

துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, கடலை பருப்பு, காய்ந்த கறிவேப்பிலை, வர மிளகாய் என அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொன்னிறமாகி நல்ல மணம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையை வறுக்கும்போது, அதனுடன் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். கட்டிப்பெருங்காயம் எடுத்தால், அதை தனியாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

பூண்டை உறித்து தனியாக சில துளிகள் நல்லெண்ணெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

அனைத்து பொருட்களையும் ஆறவைத்து, ஆறியவுடன், காய்ந்த மிக்ஸிஜாரில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு என இரண்டையும் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். உளுத்தம்பருப்பை தனியாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அடுத்து பொட்டுக் கடலை, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் அல்லது கட்டிப்பெருங்காயம், காய்ந்த கருவேப்பிலை, உப்பு மற்றும் வறுத்த பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த அனைத்துப்பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு தட்டில்கொட்டி ஆறவிடவேண்டும். ஆறியபின் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால், ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

இந்தப்பொடியை சூடான சாதத்தில் சேர்த்து நெய்யுடன் சாப்பிட சுவைஅள்ளும். இட்லி மற்றும் தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதை தினமும் சாப்பிடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பொடியாக இருக்கும்.

விருந்துகளில் இந்த பொடியை செய்து பரிமாற விருந்தே சிறப்பாக இருக்கும். இந்தப்பொடியை சாம்பார் சாதத்துக்கு முன்னர் உணவில் சேர்த்து சாப்பிடவேண்டும்.

உங்களுக்கு நேரம் இல்லாத நாட்களில் இந்த ஒரு பொடி போதும். அந்த மதிய உணவையே சிறப்பாக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு துவையல் அல்லது ஊறுகாய் கூட போதுமானது. உங்களின் லன்ச் சிறக்கும்.

இதுபோன்ற பொடிகளை செய்துவைத்துக்கொண்டால் நீங்கள் டென்சன் இல்லாமல் சமைக்க முடியும். அவசர காலத்துக்கு உதவும் ஒன்றாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

  

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.